பக்கம்:தரும தீபிகை 7.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. இ ற ப் பு 2457 புண்ணியமான வாழ்வு கண்ணியமாய்க் கதிநலம் காணுகி /றது; அங்கனம் அல்லாதது அவலமா யிழிந்து கழிகிறது. The end of a dissolute life is commonly a desperate death. (Bion) நெறிகேடான வாழ்வின் முடிவு பரிதாபமான கொடிய துயரச் சாவாப் முடிகிறது என இது குறித்துள்ளது. தருமநீதியோடு ஒழுகிவரும் புனிதரே மரண பயம் இன்றி மகிமை மிகப் பெறுகின்ருர்; அம்முறையில் வாழ்க்து நன்மை புறுக. சாவு இனிமை யாய் வரப் புனிதமா வாழுக. _ _ 929. பேரின்ப மான பெரும்பொருளை விட்டுவந்து பாரின் புழந்து படுமுயிரை-கேரின்பம் எய்த உடம்பை இடையகற்றும் சாக்காடு வெய்தாவ தாமோ விளம்பு. (கூ) இ-ள். அதிசய ஆனந்தமுடைய ஆதிமூலப் பொருளைப் பிரிக் து வந்து அவல நிலைகளில் இழி ந் து உயிர்கள் உழலுகின்றன; தயர்களுக்கு இடமாய் நேர்ந்த உடல்களே இடை நீக்கி உய்தி தருகிற சாவு கொடியது ஆகுமா? எவ்வழியும் இனியதே என்க. பிறப்பும் இறப்பும் இயற்கை நிகழ்ச்சிகள்; மனித முயற்சி களைக் கடந்தன; பழவினைகளால் விளைந்து வருவன; அவை வந்த வண்ணமே வ | ழ் வு க ள் வாய்ந்து வீழ்வுகள் தோய்க் தள்ளன. தோன்றின மறையும் என்பது ஆன்ற மறை மொழி. உருவங்கள் தோன்றலும் சிலகாலம் உலாவித் திரிதலும் பருவம் முடிந்ததும் அருவமாப் மறைந்த போதலும் அதிசய விளுேகங்களாய் நிலவுகின்றன. எண்ணரிய நிலையில் மண்ணறிய வந்து விண்ணறிய கின்று எங்கும் அவை பொங்கிக் திரிகின்றன. உயிர்கள் ஏன் இவ்வாறு உடல்களை எடுத்து எவ்வழியும் கிலேயின்றி வெவ்விய துயர்களோடு தொடர்ந்த உ ழலுகின்றன? இந்தக் கேள்விகள் பலருடைய சிக்கனைகளுக்கு வந்துள்ளன: வந்தம் தெளிவான விடைகூற முடியாமையால் பழவினை வழி யே பிறவிகள் விளைந்து வருகின்றன என்று விழுமிய மேலோர் 308

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/148&oldid=1327109" இலிருந்து மீள்விக்கப்பட்டது