பக்கம்:தரும தீபிகை 7.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2465 கூவியாக நாளும் மூன்று வேளை பிண்டம் போட வேண்டும்; கொஞ்சம் தவறினல் கொடுந்துயர் செய்து வெளியே விரட்ட சேர்வர்; இப்படி அல்லல் வாழ்க்கை வாழ்வதைவிடச் சாவது ால்லது; செத்தால் மீண்டும் பிறவாமல் இருக்க வேண்டும் என இப்பெரியார் உறுதியாக் கருதியுள்ளமை இங்கே காண வந்தது. ஞான நோக்கு ஊன வாழ்க்கையை ஒர்ந்து உணர்ந்து உய்தி கிலேயைத் தேர்ந்து கொள்கிறது. பிறப்பு இருப்பு வாழ்வு சாவு யாவும் அவலக் கவலைக ளாகவே அடர்ந்து படர்ந்துள்ளன; இக்க அல்லல் நிலைகளிலிருந்து ஒல்லையில் நீங்கி நல்ல கதியைக் காண்பதே தனது உயிர்க்கு ஒருவன் நன்மை செய்வதாம். கெக்கு கெக்குள் உருகிஉருகி கின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் ாக்கும் அழுதும் தொழுதும் வாழ்க்கி நாவிைதத்தால் கூற்று நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிவிர் சிலிர்த்துப் புக்கு கிற்பது என்று கொல்லோ என்பொல்லாமணியைப்புணர்ந்தே. (கிருவாசகம்) துன்பத் தொடர்பு நீங்கி இன்பமூர்த்தியான இறைவனை அடைய விரைந்து மாணிக்கவாசகர் உருகி மறுகி உரையாடி யுள்ள நிலையை இகளுல் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். இறந்து படுமுன்னே இன்னுயிர்க் கென்றும் சிறந்த கதிகிலேயைச் செய்தான்-பிறந்த பயனே அடைந்தான் பலனிழந்து செத்தான் அயரையே கண்டான் தொடர்ந்து. இதனே கினேந்து கொண்டு நிலைமையைத் தெளிந்து கொள்க. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இறப்பும் பிறப்பும் இணை பிரியாதன. உடுத்த உடை களைவதுபோல் எடுத்த உடல் கழிவது. பிறப்பின் பயன் பெறின் இறப்பு இனிமையாம். வினைப்போகம் கழியின் தேகம் அழியும். முதுமை களைந்து சாவு புதுமை புரியும். அதன் கினேவால் அறம் பல விளையும். அதனை மறந்திருப்பது மதி கேடாம். இறுதி காணுமுன் உறுதி கானுக. அங்கனம் காணின் எங்கனும் இன்பமாம். இறப்பே உலகைச் சிறப்புறச் செய்யும். கூக-வது இறப்பு முற்றிற்று. ՅՈՁ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/156&oldid=1327117" இலிருந்து மீள்விக்கப்பட்டது