பக்கம்:தரும தீபிகை 7.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2474 த ரும பிே ைக மாற்ருமல் மனிதன் அனுபவிக்க நேர்ந்துள்ளான். இவ்வாறு விஜனகளின் நியமங்கள் நேர்ந்திருத்தலால் அவன் எவ்வாறு வாழ்ந்து வர வேண்டும் என்பதை ஒர்ந்து கொள்ளலாம். தரும கலங்கள் தோய்ந்து திருந்திய நீர்மையில் ஒழுகி வருபவனே விழுமிய சீர்மைகள் வாய்ந்து மேலான நிலைகளில் விளங்கி வருகிருன். எவனுடைய சித்த விருத்தி சிறந்து வருகிற தோ அவன் உத்தமனப் உயர்ந்து ஒளி மிகப் பெறுகின்ருன். தன் மனத்தை நல்ல வழியில் பழகி வருபவன் எல்லாப் பாக்கி யங்களையும் எளிதே அடைந்த கொள்ளுகிருன். கினேவின் வழி வினைகளும், வினைகளின் வழியே போகங்களும் வி ளே ங் து வருகின்றன. தேக வாழ்வுகள் காரணங்கள் கலந்துள்ளன. நல்ல சுகங்கள் கல்வினையால் வருகின்றன திய துயரங்கள் தீவினையால் விளேகின்றன. கருமங்களிலிருந்தே மனித மரபுகள் மருமங்களாய் வளர்ந்து வந்துள்ளன. அகத்தில் உள்ள அளவே புறத்தில் மனிதன் பொலிந்து தோன்றுகிருன். மனம் இனிய காப் அமைக்கால் அவன் புனிதன உயர்க் து புண்ணிய கதிகளை எய்துகிருன். உள் ளம் பழுதாகுல் எல்லாம் பாழாப் இழிக்கபடுகிருன். மனிதனு டைய மகிமைகளுக் கெல்லாம் இனிய மனம் தனி மூலமா யுள்ளது. இருதய சுத்தம் அதிசய சித்திகளை அருளுகிறது. மனம் தாயது ஆயின் அதிலிருந்து புனித கி னே வு க ள் தோன்றுகின்றன; அவை புண்ணியங்களாய் விரிகின்றன; கள்ளம் இல்லாத நல்ல உள்ளம் கடவுள் நிலையம் என்பது பழ மொழியாய் வந்து அதன் விழுமிய நிலைமையை விளக்கியுளது. A great, a good, and a right mind is a kind of divinity lodged in flesh. (Seneca.) திேயான நல்ல உயர்ந்த உள்ளம் உடலுள் தங்கியுள்ள ஒரு தெய்வமே என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. மனம் புனிதமாய் மருவிவரின் அந்த மனிதன் தெய்வமாய்ப் பெருகி வருகிருன். அது தீயது ஆல்ை அவன் பேயாய் இழிந்து காயாய்க் கழிந்து சேமா அழிந்து காசமாய்ப் போகிருன். மனம் இனிமை தோய்ந்து செம்மையாய் மருவிய அளவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/165&oldid=1327126" இலிருந்து மீள்விக்கப்பட்டது