பக்கம்:தரும தீபிகை 7.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2475 மனிதன் மகிமை வாய்ந்த நன்மையாய் வருகிருன். அது சிறு மையானல் அவன் சின்னவய்ை இருமையும் இழந்துவிடுகிருன். மனிதனும் மனமும் மலரும் மணமும்போல் மருவியுள்ளமை யால் இருவகை நிலைமையும் ஒருமுகமாய்த் தெரியலாகும். The mind grows narrow in proportion as the soul grows corrupt. [Rousseau] உயிர் பழுது படுகிற அளவு உள்ளமும் குறுகி இழிவாகி றது என ருசோ என்னும் அறிஞர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். உயிருக்கும் மனதுக்கும் உள்ள உறவுரிமைகளையும் தொடர்பு களையும் இதல்ை உணர்ந்து கொள்கிருேம். கண்ணுள் ஒளிபோல் ஆன்ம விழியாய் அமைந்துள்ள மனம் மாசுபடியாதிருந்தால் தெய்வத்தேசுகள் நிறைந்து எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து விளங்குகிறது. செவ்விய இதயம் திவ்விய உதயமாகிறது. அகத்தின்படியே சகத்தில் எவரும் சார்ந்து திரிகின்றனர். புண்ணியவான் மகாத்துமா தரும மூர்த்தி என ஒருவன் கண்ணி ய்ம் பெறுவதும், பாவி துராத்துமா பழிகாரன் என ஒருவன் இழிவுறுவதும் அவனவனுடைய அகத்தின் விளைவுகளே. நல்லமனம் இனிய அமுதமாய் எவ்வழியும் இன்பம் தருகி றது; தீயது கொடிய விடமாய் யாண்டும் துன்பமே புரிகிறது. மனம் இனிய தானுல் மனிதன் மகாய்ைக் கனமகிமை யாவுமே காண்பான்-மனம்தான் கொடியது எனினே குடிகேடு செய்து படுபாவி யாவன் படர்ந்து. மனத்தின் விளைவுகளை இது தெளிவா விளக்கியுளது. மேலோர் கீழோர் நல்லோர் தியோர் என வெளியே மனி தர் தெரிய வருவது உள்ளேயுள்ள மனதின் நிலைமைகளினலே யாம்; அது நல்ல வழிகளில் பழகிவரின் அதனை யுடையவன் எல்லா வழிகளிலும் உயர்ந்த யாண்டும் இன்பமே காண்கிருன். மனம் செம்மையானல் இம்மையும் மறமையும் இன்பம் சுரங்து வருகின்றன. அரியசுகங்களை இனிய அகங்களே.அருளுகின்றன. உள்ளம் தூயதேல் பேரின்ப வெள்ளம் பாயும் என்பது முது மொழி. இனிய இகமுடைய மனிதனுக்குக் கனி அடையாளம் அ வ்வுயிர்க்கும் எவ்வழியும் இகம் புரிதலேயாம். வ ர் க ள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/166&oldid=1327127" இலிருந்து மீள்விக்கப்பட்டது