பக்கம்:தரும தீபிகை 7.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2484 த ரும தி பி கை பஞ்ச சேனதிபதிகள் என்று பெயர் பெற்றிருந்த ஐந்து தளபதிகளை ஒருங்கே கொன்று தொலைத்த அனுமான் வெற்றி பெற்றுள்ள நிலையை இது உணர்த்தியுள்ளது. ஐம் பொறிகள் போல் எவ்வழியும் வெறிகொண்டு யாரையும் அடக்கி விருேடு திரிந்து வந்த வெய்ய ஐவரை இவ்விரன் கனியே வென்று கின் அறுள்ளதைக் கவி இங்கனம் வித்தக விநயமா விளக்கி யருளினர். பொல்லாக புலன்களை அரக்கருக்கும், நல்ல அறிவை அனுமா லுக்கும் ஒப்பு உரைக்கது நுட்ப நிலைகளை உய்த்து உணர வந்தது. பொறி வெறியனப்ச் சிற்றின் பங்களே நுகர்பவன் அறிவு கேடனய் அவல நிலையில் இழிந்து அவமே அழித்த ஒழிகிருன். He that lives in the kingdom of sense, shall die in the kingdom of sorrow. [Baxter] இந்திரிய சுகங்களில் அழுக்தி வாழ்பவர் துன்ப நிலைகளில் இழிந்து சாவார் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. The body of a sensualist is the coffin of a dead soul. [Boveel சிற்றின்ப போகியின் உடம்பு செத்த உயிரின் சவப்பெட்டி என இது குறித்தள்ளது. விடய வாஞ்சை கொடிய விடமாய் நெடிய துயர்களே விளக்க மக்கரை கிலே குலைத்து வருகின்றது. காம நுகர்வில் கழி பேரிழிவினன் சாகுமுன்னரே சவநிலை யை அடைகிருன். புலன்களே அடக்கி வாழ்பவன் புனிதனுப் உயர்ந்து புண்ணியங்கள் நிறைக் த கலன்கள் பல பெறுகிருன். உடல் உள்ளம் உணர்வு உயிர் என்னும் இக்க நான்கு நிலை களையும் பாங்கோடு கவனித்து மனிதன் பண்போடு வாழவேண் டும். மூலமுதலான ஆ ன் ம . எவ்வழியும் விழுமிய நிலையில் விளங்கிவரக் கருவி கரணங்கள் ஒழுகிவரின் அக்க மனிதவாழ்வு திவ்விய வாழ்வாம். ஞான செறி கலங்கள் பல தருகிறது. ஊன நோக்கில் உழல்பவர் என்றுமே ஈன நோக்கில் இழிந்து கழிகின் ருர்; ஞான கோக்கினர் நாளும் நலமுடன் வானம் நோக்கி வளர்ந்து வருகின் ருர். இழிந்த புலையை விலகி உயர்க்க நிலையைக் கருதி ஒழுகுக. _ _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/175&oldid=1327136" இலிருந்து மீள்விக்கப்பட்டது