பக்கம்:தரும தீபிகை 7.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சிறப்பு 248.7 சுத்தமாய்ச் சொரூபமாம் என்னுருவு அலால்வேறு தோன்றக் காணேன்: வத்தியான் வாராத பொருள் கயவேன்; வந்தபொருள் அனைத்தும் தள்ளேன்; கித்தமாய்த் தன்னிலையில் கிற்கும் எனது அறிவுருவின் கிலேயா கிற்பேன் ஒத்தவாறு ஏதுவரும் அதுவருக என்றழுந்தி ஒருமை யான்ை. (ஞானவாசிட்டம்) சனக மன்னனுடைய நினைவு நிலைகளையும் ஞான விசாரணை களையும் இவை இங்கே நன்கு காட்டியுள்ளன. நூறு ஆண்டுகள் ேேராடு வாழும்படியான பூரண வயது அமைந்து, அரிய பெரிய செல்வங்கள் கிறைந்து, நெடிய தேசஆட்சி வாய்ந்து முடிமன்ன ஞய்ப் புகழ் மிகுந்து இருந்தாலும் கடிது மறைந்த ஒழியும் மாய வாழ்வே; பொய்யான இதனை மெய் எனக் களித்து மகிழ்வது புலைமயக்கமேயாம்; பரமான்மாவே எனது ஆன்மாவாப் இனிது மருவியுளது; இந்த உண்மையை உறுதியாய் உணர்ந்து உய்தி பெற்றேன் என இம்மன்னன் துணிந்துள்ள துணிவு மன்பதைக் குத் தெளிவான மதிகலங்களை இனிது அருளி ஒளி புரிந்துள்ளது. உயிர்க்கு உறுதி நலங்களைக் கருதி யுணர்பவர் உ ப்தி பெறு கின்றனர். கருதாதவர் வாழ்வைப் பாழாக் கழித்து வறிதே அழிந்து போகின்றனர். பிறந்தன யாவும் இறக்கபோம் என்ப தை யாவரும் அறிந்துள்ளனர். தாமும் சாவோம் என்று எல்லா ரும் தெரிந்திருக்கின்றனர். தெரிந்தும் பிறந்த பயனை மறந்த பேதைகளாப் இழிந்து போவது பெரிய மாய மருளாப் மருவி யுள்ளது. மடமை வாழ்வில் கொடுமைகள் கூத்தாடுகின்றன. கொடிய இருளில் குருடு பட்டுக் கிடப்பதுபோல் நெடிய மையலில் மாந்தர் கிலைகுலைந்து வீழ்ந்து புலையா யுழலுகின்றனர். அறிவுடைய பிறப்பில் பிறந்தும் அறியாமை பிரியாமையிருப்பது அதிசய வியப்பாகிறது. நல்ல அறிவு அல்லலே நீக்கியருளுகிறது. பொல்லாத மடமை புலைகளேயே எவ்வழியும் விளைத்து வருகிறது. There is no sin but stupidity. [Wilde] மடமையினும் கொடுமையான பாவம் வேறு இல்லை என இது குறித்துளது. மூடத்தால் செடிய பீடைகள் விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/178&oldid=1327139" இலிருந்து மீள்விக்கப்பட்டது