பக்கம்:தரும தீபிகை 7.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2488 த ரும தி பி கை எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணமாயுள்ளமையால் மடமை கொடிய பாவம் என நின்றது. பிறப்பின் பெருமையை உணர்ந்து சிறப்பான பயனை அடைவதே சீரிய ஞானமாம். 939. உற்ற பிறப்பை உயர்ந்த சிறப்பாக்கி மற்ருேர் பிறப்பை மருவாமல்-எற்றும் அழியாத பேரின்ப அவ்வாழ் வடையின் ஒழியாத மேன்மை உனக்கு. -- (க) இ-ள். உரிமையாப் அடைந்த பிறப்பை உயர்ந்த சிறப்பு ஆக்கி வேறு ஒரு பிறவியை அடையாதபடி பேரின்ப வாழ்வைப் பெறுக அவ்வாறு பெறின் எவ்வழியும் திவ்விய மேன்மையாம். பிறந்த பயனைப் பெறுபவன் சிறந்த பரமன் ஆகிருன். உற்ற என்றது வினைவயத்தால் விளைந்து வந்துள்ள விளைவினை உணர்ந்து கொள்ள வங்கது. அரிய கல்வினையால் அடைந்த பிறவியைக் கொண்டு பெரிய பயனை அடைவதே பெருஞ் சிறப் பாம். உரிய கருவியால் பெறவுரியதை உரிமையோடு பெறவில்லை யாளுதல் உம்ம அது பழுகாப் ஒ ழி ங் து போகிறது. உலகக் கடலைக் கடக்கற்கு மரக்கலம்போல் பிறவிக் கடலைக் கடந்து போகற்கு மனித தேகம் இனிதாப் மருவியுள்ளது. எய்த அரிய தேகம் எய்தியது உயிர் துயர்நீங்கி உயர்வா உப்திபெறவேயாம். மனிதன் அறிவுடையவன் ஆதலால் யாக்கையின் நிலையை உணர்ந்து அதன் பயனை அடைய நேர்கின்ருன். மனைவி மக்க ளோடு மருவி எவ்வளவு சுக போகமாப் வாழ்ந்து வந்தாலும் முடிவில் இறந்து போவதையே எவனும் எதிர்ந்து காண்கின் முன். அக்கச் சாவு சேருமுன் தன் ஆவிக்கு இனிய உறுதிகலனை அடைக்கிருப்பின் அவனுடைய பிறப்பு சிறப்புடையதாகின்றது. சீவன் நலமுறச் செய்து வருபவன் தேவன் ஆகின்ருன். இல்லாளோடு கூடி இளமையில் இனிதுவாழும் பொழுதே முதுமைக்கு உரிய நல்ல அறங்களை நாளும் செய்து கொள்ள வேண்டும் என்பது வாழ்க்கையின் குறிக்கோளாய் வகுக்கப் பட்டுள்ளது. நெறிமுறையோடு அவ்வாறு தோப்ந்து வருவது பு க ழு ம் புண்ணியமும் பொருந்தி வருகிறது; வரவே அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/179&oldid=1327140" இலிருந்து மீள்விக்கப்பட்டது