பக்கம்:தரும தீபிகை 7.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2489 றெந்த வாழ்வாய்ச் செழித்து விளங்குகின்றது. வாழ்வுக்குச் சிறப்பு சீவன் தாழ்வாப் விழாமல் தகவாய் உயர்வதே யாம். காம போகங்களை நுகர்ந்து சேம நியமங்களோடு சேம மாய் ஒழுகி வரினும் மு. த ைம நேர்ந்ததும் துறவு நீர்மை கோய்க்க அரிய கவம் வாய்ந்து விடு பேற்றைக் கருதி விரதம் பூண்டு வாழ்வது மேலோர் இயல்பாய் மேவி நிற்கின்றது. காமம் சான்ற கடைக்கோட் காலே ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம், கற்பு 51) மனே வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து வந்த ம னி த ன் முதுமையில் வாழவேண்டிய கிலேமையை இலக்கணம் இவ்வாறு விளக்கியிருக்கிறது. இயல் விதி மனித மரபின் முறையினை உயர்வா. ஒழுங்கு செய்துள்ளது. இங்கே சிறந்தது என்றது விடு பேற்றின. சிற்றின் பங்கள் எல்லாவற்றினும் பேரின் பம் உயர்ந்தது. ஆதலால் சிறந்தது என வரைந்து கூறினர். இந்த அரிய சிறப்பை அடைந்த அளவு உரிய பிறப்பு உயர்ந்து ஒளிமிகப் பெறுகின்றது. இகலோக வாழ்வில் முடிவான பயனை அடைவது பரலோக வாழ்வுக்கு வரமான உரமா வழி செய்த படியாம். பிறவிகளுள் மனித உருவில் மருவி வருவது மிகவும் அரி.த. கூரிய சீரிய அறிவுகலம் அமைந்தது; கண்டதைக் கொண்டு காணுதகைக் கருதிக் காண்பது; அண்ட கோடிகளையும் வே கோடிகளையும் ஆராய்ந்து அறிய வல்லது; உலகம், உயிர், பரம் என்னும் மூன்று தத்துவங்களேயும் உய்த்தணர்ந்து முடிவுகாண வுரியது; இத்தகைய வித்தக விவேகம் தோப்ந்து எத்தகைய நிலைகளையும் எதிர் அறிந்து உப்தி பெற உரியது ஆதலால் மானு டப் பிறவி பெறுதற்கு அரியது எனப் பேர்பெற்று கின்றது. இக்க அருமையை உணர்ந்தவர் இதல்ை பெறவுரிய பயனை விரைந்து பெறுகின்ருர். நிலைமையை உணராமல் பொழுதைப் பழுகாக் கழிக்கும் இழுகைகளுக்கு இரங்கிப் பிறப்பின் பெரு மையை உணர்த்துகின்ருர். பரிவு தோய்ந்த அறிவு மொழிகள் அரிய இன்ப ஒளிகளாப் எவ்வழியும் திவ்விய நிலையில் கேசு விதி யாவருக்கும் இனிய போதனைகளை அருளி வருகின்றன. 312

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/180&oldid=1327141" இலிருந்து மீள்விக்கப்பட்டது