பக்கம்:தரும தீபிகை 7.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ՋԶՐ த ரு ம தீபிகை எனறு ஒவ்வொருவரும் எவ்வழியும் வெவ்விய பேராசையோடு பெருகித்திரிகிற நரர்கள் நடுவே பிறர்க்கு இதத்தை நாடுகிறவர் பெரிய ஒரு தெய்வப் பிறவியாய்ச் சிறந்து திகழ்கின்ருர. கொடிய சுடு வெயிலைத் தன் மேல் தாங்கி இனிய குளிர் நிழலைப் பிறர்க்கு உதவுகிற கருக்கள் போலத் தரும சிலர்கள் தழைத்து நிற்கின்றனர். அத்தகைய உத்தமர்களே வித்தகர் என விளங்கி எத்தகைய நிலைகளிலும் துலங்கி வருகின்ருர், நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. (குறள், 235) ஆக்கமும் கேடும் வாழ்வும் சாவும் இதில் வந்திருக்கின்றன. கேடால் ஆக்கமும், சாவால் வாழ்வும் விளைக்க வல்லவரே வித்தகர் எனத் தேவர் இங்கனம் விளக்கியிருக்கிரு.ர். இந்த வித்தகம் இங்கே உய்த்துணர்ந்து ஒர்ந்து சிந்திக்கத்தக்கது. எண்ணற்கு ஏற்ற வித்தகர் உளரே? (இரணி, 182) வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினன். (விபீடண, 55) வித்தகர் நிலையை இவை உணர்த்தியுள்ளன. வித்தகவில்லினன் என இராமனை இவ்வாறு சித்திரமாச் சொல்லியுள்ளார். ஒருவனுடைய அறிவு ஆற்றல்களுக்கு உரிய உயர்ந்த பயன் பிற உயிர்களுக்கு இதம் புரிவகே, இந்த உண்மையை ஈண்டு நுண்மையாக நன்கு அறிந்து கொள்கிருேம். மன்னுயிர்க்கு இதம் செய்வது கன் உயிர்க்கே நலமாய் விளைந்து வருகிறது. விளைபுலத்துக்கு உரம் போடுவதுபோல் எளியவர்க்கு உதவி புரிவது. உரம் செய்த கிலம் வளமாய் உயர்ந்து விளைகிறது; உதவி செய்தவன் நலமாய் உயர்ந்து யாண்டும் உன்னத பதவிகளை அடைந்து கொள்ளுகிருன். உரம்செய்த நன்செய் உயர்ந்து விளேந்து வரம்செய் தருளும் வளங்கள்--தரம்செய்து பேணும் மனிதன் பெருமையாய் எவ்வழியும் காணும் மகிமை கனிந்து. ஒருவன் மேலான மகிமைகளே அடைய வேண்டும் ஆனல் அவன் என்ன செய்ய வேண்டும்? என்பதை இது இனிது காட்டியுள்ளது. பிறர்க்கு இதம் புரிவது பெருந்திருவாய் வருகிறது. பயிர் நீரால்வளர்கிறது; உயிர்நீர்மையால் உயர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/21&oldid=1326982" இலிருந்து மீள்விக்கப்பட்டது