பக்கம்:தரும தீபிகை 7.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வ ா ம் 2331 தனக்கே சுகமும் புகழும் வேண்டும் என்று சுயநலமாய் அவாவி அலைபவர் துக்கமும் இகழ்வும் அடைகின்ருர்; பிறர்க்கு இரங்கி அருள்பவர் புகழும் புண்ணியமும் இயல்பா எய்தி எவ்வழியும் திவ்விய பேரின்ப நலன்களைப் பெறுகின்ருர். இந்த விசித்திர நிலைகளை உய்த்துணர்ந்து உய்தி பெறுபவர் த்தம விவேகிகள் ஆகின்ருர். பொய்யான மாயமயக்கங்களில் மருண்டு தொலையாமல் மெய்யான ஆன்ம வுறுதியை மேவி மகிழுக. இனிய இதம் அரிய பெரிய பதவியை அருளுகிறது. = = - - - 890. மன்னுயிரைக் காக்க மனமுவந்து சீமூதன் தன்னுயிரைத் தந்த தகைமையை-உன்னியுன்னி ஞாலம் வியந்து கயந்து புகழுமே காலம் கடந்தும் கனிந்து. (ώ) இ-ள். பிறஉயிரைக் காக்கத் தன் உயிரைச் சீமூதவாகன் உவந்து தந்தான்; அந்த அரிய கருணை நிலையை எண்ணி எண்ணி என்றும் உலகம் வியந்து புகழ்ந்து அவனை உவந்து வருகிறது என்பதாம். சிறந்த நீர்மைகளால் மனிதன் உயர்ந்து வருகிருன். அரிய பண்பு பெரிய சீர்மைகளை அருளுகின்றன. கனக்கே சுகத்தை நாடுவதும் தன்னலமே கருதி விரைவதும் பெரும்பாலும் மக்கள் பால் மருவியுள்ளன. பொதுவான இந்த நிலையைக் கடந்து பிற உயிர்களுக்கு இரங்கிப் போருள் புரிந்து தன்னலம் கருதாமல் உதவி செய்பவன் உன்னதமான உத்தமனகிருன். ஆகவே புண்ணிய மூர்த்தி என்று உலகம் அவனை உவந்து போற்றுகிறது. கருணை கனிந்த தரும வான். சீமூதவாகன் என்பவன் சிறந்த அரச குமாரன்; நல்ல அறிஞன்; எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் உடையவன். மலைய வதி என்னும் அழகிய மங்கையை மணந்து சுகமாய் வாழ்ந்து வந்தான். இனிய குளிர் பூஞ்சோலையில் ஒருநாள் தனியே போப் உலாவினன். அவ்வாறு உலாவி வருங்கால் அதன் அயலே மலைச் சாாலில் இருந்த ஒரு பெண் விம்மி அழுகிற ஒலி கேட்டது; அங்கே விரைந்து போனன்; அவளைக் கண்டான்; அம்மா! என் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/22&oldid=1326983" இலிருந்து மீள்விக்கப்பட்டது