பக்கம்:தரும தீபிகை 7.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞான ம் 2521 தெரியாமையால் இல்லை என்றும், உடலின் செயல்களை நோக்கி உயிர் ஒன்று உள்ளது என்றும் கடவுளைப் போலவே ஆன்மாவும் வாதிக்கப் படுகிறது. சூனியான்மவாதி, கேகான்மவாதி, இந்திரியான்மவாதி, அக்கக்காணுன்மவாதி, குக்குமதேகான் மவாதி, பிராணுன்மவாதி, விஞ்ஞானன்மவாதி, சமூகான் மவாதி என ஆன்மவாதிகள் இவ்வாறு வெவ்வேறு வகையில் நேர்க் தள்ளனர். உலகநோக்கை விலகி அறிவு நோக்கில் நின்று ஆன்ம விசாரணை செய்ய நேர்ந்த மேன்மையான அறிவாளரும் இங்ங்னம் மாறுபாடாப் வேறுபட்டிருக்கின்றனர். உளது இலது என்றலின் எனதுஉடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் உண்டிவினே இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா. (சிவஞானபோதம், 3) உயிரின் நிலைமை தலைமைகளே இது இனிது விளக்கியுள்ளது. உயிர்எனப் படுவது இந்த உடலின்வேறு உளதாய் உற்றுச் செயிருறும் இச்சா ஞானச் செய்திகள் உடைய தாகிப் பயில்வுறும் இன்பத்துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கின் துயிலொடும் அஞ்சவத்தைப் படும் உண்மை துரியா தீதம். (சிவஞானசித்தியார்) ஆன்மாவின் உண்மையை இது இங்கனம் உணர்த்தியுளது. வேங்கட நாதனே வேதாந்தக் கூத்தனே வேங்கடத் துள்ளே விளேயாடும் கந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லார் உயிர் தாமறி யாரே. (திருமந்திரம்) சீவனது கி லே ைய இது இவ்வாறு குறித்திருக்கிறது. வேங்கடம்=வேகின்ற கடம். என்றது உடலை சீவன் உடலுள் கின்று கூத்தாடுதலால் கூத்தன் என நேர்ந்தான். சிவன் உலகக் கூத்தன்; சீவன் உடல் கூத்தன். அண்டக் கூத்தனும் பிண்டக் கூத்தனும் அறிய வந்தனர். வரவே உரிய உறவு தெரிய கின்றது. கடத்துள் காற்று நிறைந்துள்ளது; அது உடைந்தால் வாயு வானேடு கலந்து கொள்ளும். உடலுள் ஆவி உள்ளது; அது உடைந்தால் இவ்வுயிர் பரைேடு உறவாப் உறைந்து கொள்ளும், 316

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/212&oldid=1327173" இலிருந்து மீள்விக்கப்பட்டது