பக்கம்:தரும தீபிகை 7.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2522 த ரு ம தீ பி. கை அசுத்த வாயு நல்ல ஆகாயத்தை அடையாது; வேறு வாயு மண் டலங்களையே விரவி அலையும். சுத்தமான ஆன்மாதான் பரிசுத்த னை பரமனை மருவும்; அசுத்தமுடையது அயலே மயலான பிறவிகளிலேயே விழ்ந்து திரியும். மனம் தாய்மை தோப்ந்த போதுதான் மனிதன் தெய்வமாப் உயர்ந்து உப்தி பெறுகிருன். உன்னை மறந்தாய்! என்றது உண்மையான ஆன்மகிலையை மறந்து புன்மையான தேகம் முதலியவற்றைத் தான் என்று நம்பி மோகமடைந்து திரியும் மூடநிலையை. இந்த மூடமே பீடை களுக்கெல்லாம் காரணமாய்ப் பிறவிகளை விளேத்து வருகிறது. தன்னே அறியாது உடலேமுன் தான் என்ருன் தன்னே முன் கண்டான் துரியம்தனேக் கண்டான் உன்னும் துரியமும் ஈசைேடு ஒன்ருக்கால் பின்னேயும் வந்து பிறக்கிடும் தானே. (1) உன்னே அறியாது உடலேமுன் கான்என்ருய் உன்னே அறிந்து துரியத் துறகின்ருய் தன்னே அறிந்தும் பிறவி கணவாதால் அன்ன வியர்த்தன் அமலன் என்று அறிதியே. (திருமூலர்) தன்னை அறியாமையால் நேரும் அவல நிலையினைத் திருமூலர் இவ்வாறு பரிவோடு கூறியிருக்கிரு.ர். வேறு பல கலைகளையும் ஆராய்ந்து உண்மையை அறிய முயலுகிற மனிதன் தன்னை அறி வதில் பின்னமாய்க் காழ்ந்து சிற்பது ஆழ்ந்த மாய மயக்கமாய்ச் குழ்ந்து கிற்கிறது. மருளும் இருளும் பொருளறியாது கின்றன. இந்த மாய மோகங்கள் பலவகை நிலைகளில் புலேபடிங்துள் ளன. இருள், மருள், மயக்கம், மையல் என அஞ்ஞான கிலே கள் அமைந்து நிற்கின்றன. அறிவு, தெளிவு, துன்ப நீக்கம், இன்பப் பேறு என ஞான நிலைகள் கண்ணி யிருக்கின்றன. தனது உண்மை நிலையை உணராதிருப்பது இருள்; தன்னை மாருக எண்ணி நிற்பது மருள்; மயங்கி மண்டி அலைவது மயக்கம்; மயலோடு மறுகி யுழலுவது மையல். உரிய உயிரைக் கருதி எழுவது அறிவு: அறிந்ததைத் தெளிந்து கொள்வது தெளிவு; அத்தெளிவால் அல்லல் ஒழிவது துன்ப நீக்கம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/213&oldid=1327174" இலிருந்து மீள்விக்கப்பட்டது