பக்கம்:தரும தீபிகை 7.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2523 அங்க்ேகத்தால் நேர்ந்த ஆனந்தம் இன்பப் பேறு. ஆன்ம நிலையை மறந்து அவலமா யிழிந்து அலைவது அஞ்ஞானம்; அந்த ஈன மூடம் ஒழிக்க அளவு ஞானம் விளைந்து வருகிறது. அது வரவே துன்பங்கள் ஒருங்கே நீங்கிப் போகின் றன; அவை போகவே இன்பங்கள் ஒங்கி வருகின்றன. H .பிரமமாம் தனே மறந்த பேதைமை யேஅஞ்ஞானம்; பானிலே காணுேம் என்று பகர்தல் ஆவான மூடல்; நான் ஒரு கருத்தால் சீவன் நான் என முளைத்தல் தோற்றம்; குரவன்வாக் கியத்தால் தன்னேக்குறிக்கொளல் பரோட்சஞானம் தத்துவ விசாரம் செய்து சகலசங் தேக மும்போய் அத்துவி தம்தான் ஆதல் அபரோட்சஞானம் ஆகும்; கர்த்தம்ை சிவ பேதம் கழிவதே துக்கம் போகல்; முத்தனய் எல்லாம் செய்து முடிந்தது ஆனந்தம் ஆமே. [2] (கைவல்லியம்) அஞ்ஞானம் முதல் ஆனந்தம் ஈருகவுள்ள கிலைகளை இவை தெளிவாக் குறித்துள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து நோக்கித் தத்துவ விளைவுகளை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். பொப்யான புலைகளை அறிய யாவரும் அவாவி அலைகின்ருர்; மெய்யான நிலையை எவரும் உணருவதில்லை. இக்க வெப்பநிலை வைய மையலாப் மருவி வழிவழியே அழிதயராய்ப் பெருகியது. உலகப் பொருள்களை எல்லாம் கண் நேரே காண்கிறது; எதையும் கண்டு களிக்கும் இயல்புடைய அது தன்னைக் காணு வதில்லை; ஒரு கண்ணுடியைக் காண சேர்ந்தால் அப்பொழுது தன்னை எதிரே அது கண்டு மகிழ்கிறது. அதுபோல் எல்லாவற் றை பும் அறிகிற அறிவு தனது உண்மை நிலையை உணர்வதில்லை; தெளிந்த ஞானம் ஆகிய கண்ணுடியை அடைந்தபொழுதுதான் தன்னை அறிந்து அது பேரானந்த அடைகிறது. இருளை நீக்கி ஒளி இன்பம் கருதல்போல் மருளை நீக்கி ஞானம் பேரின்பத்தை அருளுகிறது. ஊன கிலைகள் யாவும் அகல்ை ஒழிகின்றன. அரிய இனிய இந்த ஞானம் உதயம் ஆகவில்லையானல் பாசபக்தங்களில் வீழ்ந்து மனிதன் ஈனமாயுழல்கின்ருன்; அந்த ஈனப்புலையை ஒழித்துப் பேரின்ப நிலையை அருளுகலால் ஞானம் வே அமுதம் எனவும் கேவஒளி எனவும்புகழ்ந்தபோற்றவந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/214&oldid=1327175" இலிருந்து மீள்விக்கப்பட்டது