பக்கம்:தரும தீபிகை 7.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2529 பிறப்பையும் இருப்பையும் வாழ்வையும் சாவையும் நேரே அறிந்துவரினும் அவற்றின் புலே க ளே யு ம் நிலைகளையும் பலர் உணர்ந்து உறுதி காணுமல் ஊனமா யுழலு கின்றனர். தம் முடைய இனிய உயிர்க்கு இதத்தை நாடாதவர் மதிகேடராகின் றனர். ஈன இடர்களுக்கெல்லாம் ஞான சூனியமே மூலகாரண மாய் முடிகிறது. மெய்யறிவு குறைய வெய்யதுயர் விரிகிறது. உண்மை கிலையை ஊன்றி உணராமல் புன்மையான வழி களில் மனம் போனபடியெல்லாம் மருண்டு திரிவது மதிகெட்ட படியாம். மதிகெட்டான் கதிகெட்டான் என்பது முதுமொழி. தாயமதி இழிந்த அளவு தீய விதி விளைந்து விரிந்து வருகிறது. மதி உயர்ந்தது. ஆனல் மனத்தை நல்ல நெறிகளில் நடத்தி நலம் பல கானுகிறது; அது இழிக்ககால்ை ஒளி இழந்த கண் போல் குருடுபட்டு யாண்டும் அல்லல்களேயே அடைகிறது. மெய்தேர்ந்த விவேகம் கைதேர்ந்த பாகன்போல் வாழ்க்கைத் தேரை வசமா நடத்துகிறது; பாகன் சரியாய் இல்லையானல் தேர் நேரே சடவாது; சிதைந்து விழும்; விவேகம் தெளிவா யில்லையானல் வ ழ் வு ஒழுங்கா நடவாது, ஊனமடைந்து தாழ்ந்து போம். விழியின் ஒளி போல் அறிவு வழி தெரிகிறது. தேகம் தேர்; பொறிகள் குதிரைகள்; மனம் கடிவாளம்; மதி பாகன்; சீவன் அரசன். சீவியத்தை இவ்வாறு ஒவியமா உபநிடதம் உருவகம் செய்து ஒழுங்கு காட்டியுள்ளது. அறிவாகிய பாகன் சரியாயில்லையாயின் மனம் மதம் மீறி அலையும்; பொறிகள் வெறிகொண்டு திரியும்; வாழ்வு பாழாம்; வேன் நாசமாம். மதிநலம் குன்றிய அளவு மனிதன் குன்றிக் கதிகலம் யாதும் காளுமல் கழிந்து இழிந்து ஒழிந்து போகிருன். மனமும் மதியும் இதமாய் இனிது அமையின் அக்க மனிதன் புனிகளுய் உயர்ந்து கனியே அதிசய கலங்களை அடைகிருன். மனம்எனும் தோணி பற்றி மதி.எனும் கோலே ஊன்றிச் சினம்எனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஒடும் போது மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்னது உ&னயுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே! (தேவாரம்) பிறவிக் கடலைக் கடத்தற்கு மனமும் மதியும் முறையே 317

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/220&oldid=1327181" இலிருந்து மீள்விக்கப்பட்டது