பக்கம்:தரும தீபிகை 7.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2533 எகவுரு வாய்உயிர்கள் எங்கணும் கிறைந்தே ஒகைஒழி யாதுறையும் ஞான ஒளி ஒதும் சோகமொடு மோகம்எறி தொன்முனிவர் ஆகும் யோகியர் உளத்தினிடை அன்றியுறை யாதால். (கூர்மபுராணம், மாயா 11) உண்மை தெளியும் ஞா ன ஒளி தாய முனிவர் இடமே இனிது தோன்றும் என்னும் இது ஈண்டு துணுகி உணரவுரியது. உள்ளத்தைத் தாய்மை செய்; எல்லா உயிர்களும் இறை வன் உருவங்கள் என்று கருதுக; அவ்வாறு கருதிவரின் பிறவித் துயரங்கள் நீங்கிவிடும்; பேரின்ப முத்தி நேரே ஒங்கி வரும். 950. உன்னே முன்னம் உணர்க உணரினே பின்னேவே றின்னல் பிறவாதே-மன்னியபேர் இன்ப வுருவணுய் எவ்வுலகும் அன்பூர்ந்து முன்புதொழ கிற்பாய் முதல். (Ö) இ-ள். முன்னதாக உன்னை நீ நன்கு உணருக, அவ்வாறு உணரின் பின்பு யாதொரு துன்பமும் உனக்கு நேராக; என்றும் நிலை யான இன்ப உருவனப் இ! வ்வுலகும் உவந்து தொழ நீ உயர்ந்து விளங்குவாப் , அந்த நிலையை அடைந்து கொள்க என்பதாம். உணர்வுகலம் நன்கு நிறைந்த மனிதப் பிறவியை அடைந்தது உயர்ந்த கதியை அடையவேயாம். அவ்வாறு எ ப்தியவன் பரம பாக்கியவான் ஆகின்ருன்; எ ப்தாதவன் ஆக்கம் இழந்தவனப் அவல நிலையில் தாழ்ந்து அவமே கழிந்து போகின்ருன். மடையன் மூடன் பேதை என்பன இழிகிலேயரைக் குறித்து வந்துள்ளன; அறிவாளி மேதை ஞானி என்பன உயர் நிலை யாளரை உணர்த்தி வருகின்றன. அறிவைவிட மேதை என்னும் ச்ொல் நூறுமடங்கு உயர்ந்தது; மேதையைவிட ஞானி என்பது ஆயிரம் பங்கு உயர்ந்தது. ஞானம் ஆன்மாவின் மேன்மையான ஒளி. இதனையுடையவர் ஒதாமலே எல்லாக் கலைகளையும் எளிதே உணர்ந்து கொள்ளுகின்றனர். உள்ளத் தூய்மையால் உறுவது ס", ஆதலால் பேரின்ப வெள்ளத்தை நேரே இது அருளுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/224&oldid=1327185" இலிருந்து மீள்விக்கப்பட்டது