பக்கம்:தரும தீபிகை 7.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2534 த ரும தீ பி. கை கல்வியறிவு கை விளக்கைப்போல் சிறிதுதான் காண உதவு கிறது; ஞானம் கதிர் ஒளிபோல் அரிய பல பொருள்களை எளி தே தெரியச் செய்கிறது. இதனே இயல்பாக வுடையவன் உயர் ஞானியாய் ஒளிமிகப் பெறுகிருன்; இழந்தவன் கழிமடையனப் இழிந்து அழி துயரங்களில் யாண்டும் நீண்டு உழல்கின்ருன். A man's wisdom is his best friend; folly his worst enemy. (W. Temple) ஒரு மனிதனுடைய ஞ | ன ம் அவனுக்கு நல்ல நண்பன்; அஞ்ஞானம் கொடிய பகைவன் என இது குறித்துள்ளது. True wisdom is to know what is best worth knowing, and to do what is best worth doing. [Humphrey] அறியத் தகுந்ததை விரைந்து அறிந்த செய்யவுரியதை நன்கு புரியும்படி செய்வதே உண்மையான ஞானமாம் என இது உணர்த்தி யுள்ளது. உற்றதை உணரின் உரியது உறுகிறது. எதை அறிந்தால் எல்லா அல்லல்களும் ஒருங்கே ஒழியுமோ அதை அறிந்து அவ்வழியே ஒழுகுவதே திவ்விய ஞானமாய்த் தெளிய நின்றது. ஈனம் படியாமல் ஞானம் படிந்தவர் வானம் படிந்து வரம்பில் இன்பங்களை அடைந்து மகிழ்கின்றனர். ஈனம் தொடராமல் எவ்வழியும் பேரின்ப வரீனம் தொடர வருவதே---ஞானமென வந்த ததுவே வருபே ரொளியான அந்தமிலா ஆனந்தம் ஆம் ஞானத்தின் நயனையும் பயனையும் இது நன்கு உணர்த்தி அதனைத் தோப்ந்து உய்யுமா.அறு இங்கு ஊக்கியிருக்கிறது. வான ஒளி எதிரே வைய இருள் ஒழிதல்போல் ஞானி ஒளி முன் வெய்ய மருள் ஒழிகிறது. ஒழியவே மெய்யான பேரின்பம் மேவுகிறது. அறிவும் இன்பமும் அமுதம் சுவையுமாயுள்ளன. சக்தியம் ஞானம் ஆ ன க் க ம் என்னும் இம்மூன்றும் கடவுளுக்குத் தால சூக்கும காரண சரீரங்களாப் மருவியுள் ளன. ஞானனந்தமயம்பிரமம் என்பது வேத மந்திரம். உண்மையறிவு ஆனந்த வுருவாகி எவ்வுயிர்க்கும் உயிராய் நீரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/225&oldid=1327186" இலிருந்து மீள்விக்கப்பட்டது