பக்கம்:தரும தீபிகை 7.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2544 த ரும பிே ைக அரச போகங்களில் ஆழ்ந்திருந்த வேங்கன் தேர்ந்த மெய் யுணர்வு தோன்றவே உயிர்க்கு உய்தி கருதி ஒர்ந்த சிந்தனை செப்து உரிமையான மந்திரிகளிடம் இவ்வாறு தன் உள்ளத் தைத் திறந்து உரையாடி யிருக்கிருன். துறவு நிலை கோப்க்க உரைகள் உலக போதனைகளாப் உயர்ந்து ஒளி செய்துள்ளன. பிறந்தன யாவும் இறந்து படுவது உறுதி; இந்த உண்மை யை உணர்ந்து விரைந்து உ யி ர் க் கு உப்தி பெற வேண்டும்; இறந்து போவதை மறந்து விடுவது கான் பிறக்க பயனே அடைந்து கொள்ளாமல் அடியோடு ஒருவன் அழிக்க படியாம்; இறத்தலை மறத்தல் போல் கொடிய கேடு வேறு யாதம் இல்லை; நெடிய பிறவிப் பெருங்கடலைக் கடத்தற்குத் துறவே உறுதி யான தோனியாம். உரிய மிதவையான அந்தக் கப்பலில் எறில்ை அவலக் கவலைகளும் அல்லல் களும் நீங்கிப் பேரின்ப மான நல்ல நகரைக் காணலாம். பறவைகளுக்கு இரு சிறகுகள் உள்ளன: அவற்ருல் அவை எளிதே உயரப் பறந்து செல்லுகின்றன; அது போல் துறவு ஞானம் என்னும் இரண்டு சிறகுகள் சிவப் பற வைக்கு அமைந்தால் மேலே முத்தி உலகுக்கு இது விரைந்து பறந்து போம்; என்றும் அழியாத பேரானந்தப் பெரு வாழ்வை அடையாமல் பொன்றி ஒழி கின்ற உலக போகங்களிலேயே உழன்று கிடப்பது இனிய அமுகத்தை இகழ்த்து விட்டுக் கொ டிய விடத்தை நுகர்ந்து நிற்பது போல் செடிய மடமையாம்: LT, MT&TojT விரனப் வாழ்ந்து வந்த நான் இனிமேல் ஞான வாழ்வு வாழாது ஒழியின் அது ஈனமே யாம்; துறந்த தவம் புரிவதே சிறந்த பிறவிப் பேரும்; துறவியாப் நான் அரிய தவம் புரிய வேண்டும் என அரசன் இவ்வாறு முடிவு செய்துள்ளான். துறவிற் சுகம்போல் ஓர் சுகம் இல்லே என்றே பெறலுற்ற வாழ்வைப் பிறர்க்குக் கொடுத்து அப் புறமுற்ற கானில் புகுந்து இன்பம் உற்ருர் அறமுற்ற பார்வேந்தர் அளவற்ற பேரால். (மெய்ஞ்ஞானவிளக்கம்) தம் அரச செல்வங்களைத் துறந்து துறவு நிலையை அடைக்க அரசர்கள் பலர் என்பதை இதல்ை அறிந்து கொள்கின்ருேம். குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகள். (சிலப்பதிகாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/235&oldid=1327196" இலிருந்து மீள்விக்கப்பட்டது