பக்கம்:தரும தீபிகை 7.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2546 த ரும தீ பி ைக கின்றனர். குறிக்க காலம் முடிக்கவுடன் கைதியை விடுதலை செப்து சிறை அதிகாரி வெளியே அனுப்பி விடுகிருன்; வினைப் போகம் கழிக்கவுடன் தேகச் சிறையிலிருந்த நீக்கிச் சிவனைக் காலன் வெளியே போக்கி மேலே வழிகாட்டி விடுகின்ருன். இப்படிப் பிரிக் துபோன சீவன் மறுபடியும் பழக்க வாசனை யால் ஆசை வசப்பட்டு இழிவினைகளைச் செய்கின்றன; செய்ய வே அழிதுயரங்களை அடைகின்றன. தன்பக் தொடர்புகள் இவ்வாறு படர்த்து தொடர்ந்த எல்லேயின்றி விரிந்து வருதலால் பிறவிகள் பெருங்கடல்கள் என நேர்ந்தன. வினையும் நுகர்வும் வித்தும் விளைவும் போல் விடாமல் விளைந்து விரிந்து வருகின்றன. உடற்செயல் கன்மம் இந்த உடல் வந்த வாறு ஏது என்னின் விடப்படு முன்உடம்பின் வினே இந்த உடல் விளேக்கும் தொடர்ச்சியால் ஒன்றுக்குஒன்று தொன்றுதொட்டு அகாதிவித்தின் இடத்தினில் மரம் மரத்தின் வித்தும் வந்து இயையு மாபோல். (1) முற்செயல் விதியை இந்த முயற்சியோடு அனுபவித்தான் இச்செயல் பலிக்கு மாறென் இகம்அகிதங்கள் முன்னர் அச்செயல் ஆல்ை இங்கும்.அவை செயின் மேலேக்கு ஆகும் பிற்செயாது அனுபவிப் பது இன்று பின்தொடரும் செய்தி. (2) மேலேக்கு வித்தும்ஆகி விளேங்கவை உணவும் ஆகி ஞாலத்து வருமா போல காம்செயும் வினேகள் எல்லாம் மேலத்தான் பலமாச் செய்யும் இகம்அகிதங்கட்கு எல்லாம் மூலத்த தாகி என்றும் வங்கிடும் முறைமை யோடே. (3) (சிவஞானசித்தியார்) கருமங்களின் விளைவுகளையும் பிறவித் தொடர்புகளையும் இவை தெளிவாக் காட்டியுள்ளன. பொருள் நிலைகளைக் கருதி யுணர்ந்து பிறவி மூலங்களைத் தெளிக்க கொள்ள வேண்டும். பாசபக்கங்கள் படித்து மயலோடு செய்த செயல்கள் வினை களாப் விரிந்து பிறவிகளை விளைத் துப் பெருந்தயர்களை இழைத்து வருகின்றன. தொல்லையாய்த் தொடர்ந்து வந்த அல்லல்கள் எல்லாம் அடியோடு தொலைய வேண்டுமானல் பற்றி கின்ற பற்றுகள் யாவும் முற்றும் ஒழிய வேண்டும். அந்த ஒழிவுதான் துறவு என ஒளிபெற்று உயிர்க்கு உறவாப் வந்துள்ளது. s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/237&oldid=1327198" இலிருந்து மீள்விக்கப்பட்டது