பக்கம்:தரும தீபிகை 7.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2550 த ரும தி பி ைக எல்லாம் இந்தப் பாசத்தாலேயே படர்ந்த தொடர்ந்து வருகின் றன. ஆசையே அல்லல்களுக்கு ஆதி மூலமாயுள்ளது. பாச நாசன் என்பது ஈசனுக்கு ஒரு பெயர். கன்னே நேசித் தப் பூசித்து வருவாாது பாசத்தை ஒழிப்பவன், தனக்கு யா தொரு பாசமும் எவ்வழியும் இல்லாதவன் என்னும் பொருளே அப் பெயர் மருவியுளது. அநாதி மலமுத்தன், பற்று அற்ருன், பரிசுத்தன், நித்திய கிருமலன் எனப் பாமன் நிலவி யுள்ளமையால் அவனது தலைமையும் தகைமையும் அறியலாகும். பாசம் படிந்துள்ளமையால் சீவனுக்குப் பசு என்று ஒ ரு பெயரும் வந்தது. ஈசனே நேரே அடைய ஒட்டாமல் உயிரைப் பிணித்த சேப்படுத்தி யிருத்தலால் பாசம் மோசமான நீசம் என நேர்ந்தது. பாசம் பற்றி யிருக்கும் வரையும் பிறவித் துயரங்களில் அழுந்தி உயிர் ஊனமாய் உழந்து சுழல்கிறது; அது அற்று விடின் அப்பொழுதே ஈசனை அடைந்து இன்புற்றிருக்கின்றது. பொல்லாத தீயரைச் சேரின் மனிதன் தியனப் அல்லலே அடைகிருன். நல்ல தாயரைக் கூடின் நல்லவனப் நலம் பல பெறுகிருன். சேர்ந்த படியே யாவும் சேர்ந்து வருகின்றன. பாசம் நீங்காத வரையும் சேமும் நாசமும் சிவனே கிலே குலைத்து வருகின்றன; அத நீங்கி ஒழிந்தால் ஈசனுப்ப் பேரா னந்தத்தில் கிளேக்கிறது.ஆன்மா என்னும் சொல் பரமான்மாவின் தொடர் பினையுடையது. கடவுளே எவனும் கண்டதில்லை; ஆயி லும் தன்னைக் கொண்டு மனிதன் அதனை உண்டு என்.று உறுதி செய்து உரிமை பூண்டு உழுவலன்போடு கருதி வருகிருன். உடலோடு கூடி வாழுகின்ற கன்னை மனிதன் முதலில் அறி கின்ருன்; அதன்பின் தன்னைத் தாங்கியுள்ள கிலத்தைத் தெரி கிருன்; முடிவில் தன்னையும் உலகத்தையும் இயக்கி அருள் கின்ற இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று அனுமானமாய்க் துணிந்து கொண்டான். மனிதன் இவ்வாறு தணிக்ததை மதிகல முடைய முனிவர்கள் விதி முறையா வகுத்து மூன்று பொருள் களுக்கும் என்ற பேரை இசைத்து ஆன்ற நூல்களா அருளி யுள்ளனர். மூவகை நிலைகள் முதன்மையா வந்தன. உலகம், உயிர், பரம் என வேதாந்திகள் கூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/241&oldid=1327202" இலிருந்து மீள்விக்கப்பட்டது