பக்கம்:தரும தீபிகை 7.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2563 957. உள்ளத்தே ஆசை உறுமளவும் வன்பிறவி வெள்ளத்தே மீள விழுவரால்-உள்ளத்துள் பற்றற்ற போதே பவமும் அறும்வித்து முற்றற்ருல் ஆமோ முளே. (எ) இ-ள் ஆசை உள்ளத்தில் இருக்கும் வரை யும் யாவரும் பிற விக் கடலில் வீழ்ந்த பெருந்தயரங்களையே அடைவர்; விதை உழியின் முளை ஒழிதல் போல் பாசப் பற்றுகள் அடியோடு அற்றபோது தான் நீசப் பிறவிகள் வேரோடு அழிக் து ஒழியும் என்க. பிறவி எவ்வழியும் வெவ்விய துயரங்களுடைய த; அதனே அறவே வி ட் டு நீங்குவதே உயிர்க்கு மெய்யான உப்தியாம்; ஆசை அடியோடு அற்ருல் அன்றிப் பிறவி வேரோடு அரு து; ஆகவே பற்றுக்களை முற்றும் துறக்க துறவியே பிற விக் கடலைக் கடந்து என்றும் பேராக பேரின்ப நிலையைப் பெறுகின்ருன். இக்க உண்மையை எத்தனை வகையாக விரித்தத் தெளிவாக உரைக்காலும், எவ்வளவு நூல்கள் எழுதி விளக்கிலுைம் யாரும் உள்ளம் தணிக்க துறந்து போக மாட்டார். வழிவழியே பழகி வந்த வாசனையின் படியே உயிரினங்கள் ஒரு முகமாய் உழக்க வருகின்றன. தான் தோய்ந்த பழக்கத்தின் படியே வாழ்வுகள் வாய்ந்து வருதலால் எந்த மனிதனும் அந்த வகையிலேயே வாழ்ந்து மாப்த்து போகிருன். மாய மருளோடு மடிங் த மடிந்து மீளவும் பிறந்து பிறந்த மீளாத பிறவியிலேயே மீண்டும் மீண்டும் சுழன்று வருகிருன். இந்த இயற்கை கியதியைக் கடந்து ஒரு வனுக்கு மெய்ஞ்ஞான ஒளி தோன்றுமானல் அது மிகவும் வியக் கத் தக்க தாம். அரிய தவமும் பெரிய புண் ணியமும் ஊடுருவி வந்தவர்க்கே இக்தவாறு எளிதே மெய்யுணர்வு வெளியாகிறது" இத்தகைய தத்துவ ஒளி விசி பவுடனே எவனும் முற்றத்துறக்க முனிவன் ஆகிருன். ஞானமும் துறவும் 'வான ஒளிகளாகின்றன. சீவக மன்னன் ஒரு நாள் மாலையில் எழில் நிறைந்த பொழில் ஒன்றில் உலாவி வந்தான். அங்கே ஒரு ஆ ண் குரங்கு பலாப் பழச்சுளைகளைத் தன் பெட்டைக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. அக் காவின் காவல்காரன் அக்கடுவனே வி ட்டி விட்டு அக்கனி யை எடுத்து உண்டான்; அதனைச் சீவகன் கண்டான். உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/254&oldid=1327215" இலிருந்து மீள்விக்கப்பட்டது