பக்கம்:தரும தீபிகை 7.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாரும் அதிகாரம். வி. தி. அஃதாவது வினைகளால் விதி விளைந்து வரும் நியதி. மனித லுடைய நிலைமைகளுக்கெல்லாம் நிலையான தலைமையுடையது ஆதலால் அதன் தகைமையை உணர இது ஈண்டு வைக்கப் பட்டது. விதியும் மதியும் கதியும் கேரே காண வந்தன. 891. நினைவு செயலால் நிகழ்ந்தன எல்லாம் வினைகள் எனவே விரிந்த-வினைதான் விதியாய் விளைந்து விளைபோகம் ஊட்டிப் பதியா யுளது பதிந்து. (க) இ-ள். நினைவு சொல் செயல் என்னும் இம்மூவகைகளால் வினைகள் விளைந்துள்ளன; அவை விதிகளாய் விரிந்து போகங்களை ஊட்டி உயிர்களை ஆட்டி உயர்வா உலாவி வருகின்றன என்க. விதியின் கிலே இங்கே மதி தெளிய வந்துள்ளது. வினை, விதி, கருமம், கியதி, தெய்வம், முறை, பால், ஊழ், பழவினை என்னும் இவை விதியின் பேர்களாய் அமைந்திருக் கின்றன. யாவும் காரணக் குறிகளையுடையன. பெயர்க் குறிப்பு கள் செயல்களின் விளைவுகளைத் தெளிவா விளக்கி கிற்கின்றன. வினை விளைவுகளுக்கு நினைவே மூல நிலையம். கினைவு எண் ணம் விருப்பம் ஆசை மோகம் என்பன முறையே அரும்பு மலர் பிஞ்சு காய் கனி என இனிது வளர்ந்துள்ளன. நினைவு முதிர்ந்தால் எண்ணம். எண்ணம் முதிர்த்தால் விருப்பம்; விருப் பம் முதிர்ந்தால் ஆசை ஆசை மிகுந்தால் மோகம். முடிவான அந்த மோக வேகங்களால் பலர் சாக நேர்ந்துள்ளனர். எண்ண அரிய எண்ண அலைகள் மனித சமுத்திரத்தில் கிலையாக மோதிக் கொண்டேயிருக்கின்றன. தொலையாத அந்த அலைகளின்படியே சீவகோடிகள் ய ர ண் டு ம் புலையாடி வருகின்றன. சித்த விருத்திகளே சீவ விருத்திகளா புள்ளன. எண்ணம் இனியது ஆல்ை அந்த மனிதன் புனிதனப் இன்ப நிலைகளை எய்தி மகிழ்கின்ருன்; அது தீயதானல் அவன் தீய குய்த் துன்ப வலைகளில் எவ்வழியும் சுழன்று உழலுகின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/26&oldid=1326987" இலிருந்து மீள்விக்கப்பட்டது