பக்கம்:தரும தீபிகை 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2336 தரும பிேகை நல்ல நினைவு, நல்ல சொல், நல்ல செயல் கல்வினைகள் ஆகின்றன. தீய நினைவு, தீய சொல், தீய செயல் தீவினைகள் ஆகின்றன. அவை புண்ணியங்களாய் இன்பங்களை அருளுகின்றன. இவை பாவங்களாய்த் துன்பங்களைத் தருகின்றன. தனது மனம் மொழி மெய்களால் கான் செய்துகொண்ட வினைகளின் பலன்களையே மனிதன் யாண்டும் அனுபவித்து வரு கின்ருன். விளைத்த விளைவுகள் போல் இழைத்த வினைகளும் கிளேத்து எழுந்து தம்மைச் செய்தவரை ச் சேர்ந்து கொள்ளு கின்றன. வினைப் போகங்களை நுகர்ந்து கழிக்கவே மனித இனங்கள் பிறந்து இறந்து தொடர்ந்து படர்ந்து வருகின்றன. ஆற்றிய வினேகளே அனுபவிக்கவே ஏற்றிய உடல்களே எடுத்து வந்திவண் வீற்றுவிற் ருகவே விரிந்து மானுடம் தோற்றிய பலன்களேத் துய்த்து மாயுமால். மனித மரபின் தோற்றங்களையும் கரும விளைவுகளின் மருமங் களையும் இது காட்டியுள்ளது. காரண காரியங்கள் பூரணமான நியமத்தோடு பொருந்தி வருகின்றன. மனிதனுடைய செயல் கருமம் என வந்தது. அது முதிர்ந்தபோது வினை என நின்றது; அது வளர்ந்த பொழுது விதி என நேர்ந்தது. விதி முதிர்ந்த அளவில் நியதி ஆயது; பின்பு அது தெய்வம் எனத் திகழ்ந்தது. இன்னவாறே பிறவும் நேர்ந்துள்ளன; காரணங்களைக் கருதிக் கானுக. வினையின் விளைவுகள் வியன் பெயர் எய்தின. கியதி=கியமமாய் நியமிக்கப்பட்டது. தெய்வம்=சீவர்களை நடத்தும் திவ்விய ஆற்றல் உடையது. பால்= இன்னருக்கு இன்னது என்று பாகமானது. முறை=உரிய அளவே ஒழுங்காய் அமைந்தது. உண்மை=பாதும் பொய்யாமல் பொருந்திகிற்பது. பழவினை = இந்தப் பிறவிக்கு முக்திச் செய்தது. ஊழ்=முன்னம் புரிக்கவினை முதிர்ந்து மூண்டது. இன்னவாறு வினைகள் விளங்துள்ளன. தாம் செய்த கருமங் களின் பலன்களை மாந்தர் மாந்தி வருவது அதிசய மருமங்களா யுள்ளது. விதி ஊட்டுவதையே உண்ண முடியும்; மாருக வேறு ஒன்றும் பண்ண முடியாது. அது அளந்தபடியே வாழ்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/27&oldid=1326988" இலிருந்து மீள்விக்கப்பட்டது