பக்கம்:தரும தீபிகை 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2337 ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது காழிை-தோழி கிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயன். - (மூதுரை, 19) விதி அமைத்தபடிதான் யாருக்கும் இனிய போகங்கள் அமையும்; அதற்கு மேலே யாதும் அமையாது என ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். நாழி விதிக்கும், கடல்நீர் நிதிக்கும் உவமைகளாம். எவ்வளவு செல்வங்கள் நிறைந்திருந்தாலும் வினையின் அளவே அனுபவம் என்பதை இது நன்கு விளக்கி யுள்ளது. விதி முகந்து தந்ததே உயிர்களின் நுகர்வாய் வந்தது. ஊழ்ஊட்டா தாயின் உலகமெல்லாம் கொண்டாலும் கூழ் ஊட்டும் கொள்ளா குடல். (அரும்பொருளமுதம்) உலகம் ஆளும் அரசர் ஆயினும் விதி அளந்த அளவே நுகர்வு என இது குறித்துள்ளது. நிதியாலும் மதியாலும் எவ்வளவு உயர்ந்திருந்தாலும் விதியின் வசமாகவே யாவரும் அடங்கியுள்ளனர்; அதைக் கடந்து யாரும் யாதம் செய்ய இயலாது. அரிய மேதைகளும் உரிய விதிவழியே உழலுகின்ருர், The best of men cannot suspend their fate; The good die early, and the bad die late. (Defoe) நல்லவர்கள் இளமையில் இறந்து போகின்றனர்; கெட்ட வர்கள் முதுமையில் சாகின்றனர்; ஆகவே சிறந்த மேலோர் களும் விதியைக் கடக்க முடியாது என இது குறித்திருக்கிறது. விதி அதிசய வலி யுடையது; யாவரும் அதன் வசமாய் நடப்பர்; வேர்களுக்குச் சுகபோகங்களை ஊட்டுவதும், தக்க சோகங்களை நீட்டுவதும் அதன் தொழில்களாயுள்ளன. = 892. முற்பிறப்பில் செய்து முடிந்தவினை ஊழாகிப் பிற்பிறப்பில் வந்து பிடிக்குமால்-இப்பிறப்பில் நல்வினைக்கும் தீவினைக்கும் நாயகனி ஆதலினல் ஒல்லும் வகையை உணர். (e-) இ-ன். முன் பிறவியில் செய்தவினை ஊழ் ஆய் ஒங்கிப் பின் பிறவி 293

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/28&oldid=1326989" இலிருந்து மீள்விக்கப்பட்டது