பக்கம்:தரும தீபிகை 7.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2338 த ரும தீபிகை யில் வந்து பிடிக்கிறது; இந்தப் பிறப்பில் நல்ல வினைக்கும் தீய வினைக்கும் நீயே நாயகன் ஆதலால் நல்லதை ஒர்ந்து ஒல்லையில் செப்து கொள்; அதுவே உயர் சுகம் நல்கும் என்பதாம். எவ்வகையானும் செய்தவினை செய்தவனை எவ்வழியும் கப்பாமல் வந்து சேர்ந்து கொள்ளுகிறது. அது கல்வினை ஆனல் வளமாப் இன்பம் தருகிறது; திவினை எனின் கொடுமையாய்த் துன்பம் புரிகிறது. வினைகளின் தொடர்பு விசித்திரமுடையது. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்அ வல்லதாம் தாய்காடிக் கோடலைத்-தொல்லேப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனே காடிக் கொளற்கு. (நாலடியார், 101) ஆயிரம் பசுக்கள் கூடியிருந்தாலும் ஒரு இளங்கன்று விரைந்து போய்த் தன் காயை அடைந்து கொள்ளும்; அது போல் எவ்வளவு மனிதப்பரப்பு விரிந்திருந்தாலும் வினை தன்னைச் செய்தவனைத் தவருமல் தழுவிக் கொள்ளும் என இது விளக்கி யுள்ளது. தாயும் கன்றும் போல வினையும் வினையாளனும்; எனவே தொடர்பும் தொன்மையும் கோய்வும் அறியலாகும். கல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் உயிர் இனங்கள் தொடர்ந்து யாண்டும் நுகர்ந்து வருகின்றன. "கல்வினே தீவினே என்றிரு வகையால் சொல்லப் பட்ட கருவில் சார்தலும் கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி வினேப்பயன் விளேயும் காலே உயிர்கட்கு மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்." (மணிமேகலை, 50) இருவகை வினைகளின் இயல்புகளை இது உணர்த்தியுள்ளது. கோவலன் சரித்திரத்தை விரித்து உரைத்திருக்கும் சிலப்பதி காரம் என்னும் காவியம் வினைப்பயனைத் தெளிவாக விளக்கவே விளக்து வந்துள்ளது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ப தைக்காட்டவே இப்பாட்டுடைச்செய்யுளை யாம் காட்டுதும் என இளங்கோவடிகள் வழங்கியுள்ளமை ஈங்கு உளங்கொளவுரியது. தன் கணவனை அநியாயமாப் மன்னன் கொன்றுவிட்டான் என்று கண்ணகி உள்ளம் கொதித்த மதுரையை எரிக்க நேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/29&oldid=1326990" இலிருந்து மீள்விக்கப்பட்டது