பக்கம்:தரும தீபிகை 7.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2597 சொன்னபடி கேட்கும்.இப் பேதைக்கும் கின்கருணை தோற்றின் சுகாரம்பமாம் சுத்தகிர்க் குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே. (தாயுமானவர்) ஆன்ம உணர்வில் தோப்ந்துள்ள மேன்மையாளரது மேலான நிலைமை நீர்மைகளே இது தலைமையா விளக்கியுள்ளது. சித்த சுத்தி வாய்ந்து சீவன் பரிபக்குவமானபோது தேவ தேவன் பேரின்பமாய் நேரே பெருகி வருகிருன். கனி தேன் அமுதம் முதலிய இனிய சுவைகளினும் பெரிய மதுரமாய் அரிய பர இடைய தோய்வு அதிசய ஆனந்தங்களே அருளுகிறது. உயிர் பரமனை நாடி உருகி வருந்தோறும் அங்கே பெருகி வருகிற பேரின்ப நிலைகளைத் தாயுமானவர் இதில் உணர்த்தி யுள்ளார். அரிய பேரின்ப அநுபூதி என்று அவர் குறித்துள்ள அனுபவசாரங்கள் நுணுகிய அனுபவங்களால் நுகர வுரியன. பேதைகிலை நீங்கி மங்கைப்பருவம் மருவியபொழுது உரிய ஒரு கணவனைத் தோய்ந்து மணமகள் இனிய சுகபோகங்களை அனுபவிக்கிருள். மடமை ஒழிந்து தெளிவான மதிநலம் மருவிய போது பரமபதியை மணந்து மனிதன் மாதவனப்ப் பேரின் பங் களை நுகர்கிருன்.இருவகை இன்பதுகர்வுகள் கருதியுணரவக்கன. என்றும் கனக்கு உரிமையான ஒருவனை இழிமடமையால் மறந்து அழிதுயரங்களில் சீவன் அழுந்திக் கிடந்தான்; விழுமிய ஞானம் உதயம் ஆகவே உளம்மிக உருகி முழு முதலைக் கழுவி அளவிடலரிய அதிசய ஆனந்தங்களைச் சுகித்துக் களித்து எவ் வழியும் செவ்வி சுரந்து திவ்விய நிலையில் இனிது திளைக்கின்ருன். பொறி புலன்களை அடக்கி உள்ளக்கை நெறியே ஒடுக்கி வரின் அது நல்ல தவம் ஆப் வருகிறது; வரவே பரமான்மா நேரே தெரிகிறது; தெரியவே சீவான்மா அதனே ஆவலோடு மருவி அதிசய சுகியாய்ப் பெருகிஆனந்த பரவசம்.அடைகிறது. நீண்ட காலம் பிரிந்த போயிருக்க தனது அழகிய நாயகனை வ திரே கண்ட இனிய நாயகிபோல் பரமபதியைக் காணவே மயிர் பரவசமாய் உருகிப் பாய்ந்து பாலொடு பால் கலந்தது போல் இன்பமாய் இணைந்து திகழ்கிறது. சிவநாயகி திவ்வியசுகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/288&oldid=1327249" இலிருந்து மீள்விக்கப்பட்டது