பக்கம்:தரும தீபிகை 7.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இனி ைம 2655 மல் மடமையாய் மாந்தர் மாய்ந்து போவது மாய மருளாய்த் தொடர்ந்து பே பேயிருளாப் அடர்ந்து படர்ந்து நிற்கிறது. நாளும் இறந்து கொண்டே இருக்கிருப் ஒவ்வொரு கிமிடமும் சாவு உன்னை நெருங்கிக் கொண்டே வருகிறது; வேகமாய்ச் சாகப் போகிருப்; சாகு முன்னரே உன் உயிர்க்கு வகேனும் ஒர் உறுதியைத் தேடிக் கொள்க என்று மனிதனுக்கு அழிவு நிலையைத் தெளிவாக நினைவுறுத்தவே நிலையாமை என ஒரு கலையாய குறிப்பை நூலோர் பலரும் வலியுறுத்தி வருகின் றனர். சாவை நினைவுறுத்தி வாழ்வைத் தெளிவுறுத்துகின்ருர். நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாள். (குறள், 334) காலத்தைக் கருதி யுணர்ந்து விரைந்து கதி காணும்படி இ.க காட்டியுள்ளது. நாள் உயிர் ஈரும் வாள் என்றது அக கழியுந்தோறும் ஆள் சாவதை அறிக் த ஆவதைக் தெளிந்து கொள்ள வந்தது. நாளை வாளா கினேயின் வாழ்வு பாழாகாது. ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினே நீக்கிப் பினம்என்று பேரிட்டுச் சூறையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு ரிேனில் மூழ்கி.கினேப்பு ஒழிந்தார்களே. (திருமந்திரம்) மனித வாழ்வின் நிலைமையைத் திருமூலர் இவ்வாறு குறிக் துள்ளார். இப்படி நிலையற்ற நிலையில் இருக்கின்ற நீ இறக்கு முன்னமே உயிர்க்குக் தலைமையான உ று தி ைய ச் செய்து கொள்க என உரிமையா இனிய உய்தியை உணர்த்தியிருக்கிருர், கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன ஒருங்குடன் கில்லா உடம்பிடை உயிர்கள். (சிலப்பதிகாரம், 10 குறைக் காற்றின் எதிரே நீட்டிய விளக்கு அவிதல் போல் உயிர்கள் இறந்து மறைக் து போம் என இது விளக்கியுள்ளது. இறப்பு நிலையை இங்ங்னம் குறித்தது பிறப்பின் பயனே மறந்த போகாமல் விரைந்து பெற வேண்டும் என்று கருதியேயாம். Death is here and death is there, Death is busy everywhere. [Shelley]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/346&oldid=1327308" இலிருந்து மீள்விக்கப்பட்டது