பக்கம்:தரும தீபிகை 7.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2658 த ரும பிே ைக வருகிற்கும் போமாகி வளர்ந்து வாளாப் பொய்யினுல் மிகவிரியும் வேலை யூடே பொருதிரைபோல் பரபதத்தே புரிந்தமாயை. (1) o பேதமுறு புந்தியே மாயை ஆகும் பெரிதுவருங் தியுமிதனேப் போக்கல் வேண்டும்; போதமுறு பேற்றில்ை அன்றி மாயைப் பொருகதியின் கரைதோன்ரு, பொருங்தத் தோன்றில் ஏதமறும் அப்பதமே இறவா வீடாம்; இம்மாயை பிறப்பிடம்ஏது என்ன வேண்டாம் சேதமுறக் கொல்வழிஏது என்று தேர்வாய் சிதைவுற்ருல் இதன் இயல்பு தெரியுமன்றே. (ஞானவாசிட்டம்) காலால் உதைபடும் பக்தபோல் காலனல் அடிபட்டுச் வே கோடிகள் தீராத தயரங்களில் உழக்க வருகின்றன; மெயப் யுணர்வினல் மையல் தெளிந்தபோது தான் வெப்ய துயரங்கள் ஒழியும் என இவை விளக்கியுள்ளன. ஞான யோகிகளுடைய அரிய இனிய அனுபவ மொழிகள் துணுகி உணர வுரியன. பொய்யான உலகப் பொருள்களைப் பற்றி உழலும் ஆசை அற்ற போதுதான் மெய்யான பரம்பொருளை அந்த உள்ளம் நன்கு பற்ற நேர்கிறது. தன் உள்ளம் எதனோடு தோய்ந்து வருகிறதோ அதன்படியே மனிதன் வாய்ந்து வருகிருன். பொறி நசைகளில் விழுந்தால் வெறியனப் இழிந்து உழலுகின்ருன். புலையான அந்த ஆசை தொலையின் நிலையான ஈசனைக் கருதி யுருகி கிறை பேரின்பம் பெறுகிருன். உலக ஆசைகள் ஒழிந்தபொழுது மனிதன் மகான் ஆகின்ருன்; மகாதேவளுேடு உறவாப் மகிமை கள் உறுகின்ருன் மையலான புலைகள் ஒருங்கே ஒழியவேண்டு மானல் மெய்யான ஞானம் தலையெடுத்து மேலே வரவேண்டும் ஐயுணர்வு அடக்கிய மெய்யுணர்வு அல்லதை உவாக்கடல் சிறுக உலகெலாம் விழுங்கும் அவாக்கடல் கடத்தற்கு அரும்புனே இன்றே; வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவ! கின் அருள்பெற்று உய்தற்கு உரியன் யான் எனின் பல்லுயிர்த் தொகுதியும் பவக்கடல் அழுந்த அல்லல் செய்யும் அவாஎனப் படும் அவ் வறுமையின் கின்றும் வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/349&oldid=1327311" இலிருந்து மீள்விக்கப்பட்டது