பக்கம்:தரும தீபிகை 7.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2344 தரும தி பி கை என்பது பழமொழியாப் எங்கும் வழங்கப்படுகிறது. சல்லது செய்தவனுக்கு நல்ல சுகங்கள வருகினறன; அல்லது செய்தவனுக்கு அல்லல்களே நேருகின்றன. உழவன் எதை விதைத்தானே அதுவே விளைவாய்ப் பெருகி அவனுக்கு வளமா வருகிறது; அவ்வாறே செய்த கருமங்களும் செய்தவ லுக்குத் தம்முடைய பலன்களைத் தகவாத் தந்து வருகின்றன. Whatsoever a man soweth, that shall he also reap. [Blble] மனிதன் எதை விதைத்தானே அதையே அறுக்கிருன் என இது குறித்தளது. செப்தவினையின் படியே பலன் எய்த நேரும் ஆதி லால் சுகத்தை விரும்புகிற மனிதன் யாண்டும் நல்ல கருமங்களை யே செய்யவேண்டும். வினைவழியே விளைவுகள் வருகின்றன. வினேயின் வந்தது; வினேக்கு விளேவாயது. (மணிமேகலை) மனித தேகத்தை இது குறித்திருக்கிறது. முன்னம் செய்த வினைகளின்படியே உடல்களை எ டு க் து வந்து உயிரினங்கள் ஈண்டு உலாவுகின்றன. உயிர் வாழ்வில் துயர் உருமல் உயர வேண்டுமானல் யாண்டும் நயமான கருமங்களையே செப்துவர வேண்டும். கருமம் தீயது ஆயின் துயரங்கள் தோய்ந்து வரும். தாம் செப்த கருமத்தின் வழியே யாவரும் ஆடி வருகின் றனர். கல்வினை தீவினை என்னும் இருவகைக் கருமங்களின் பலன்களை நுகரவே மனித உருவங்கள் மருவி வந்துள்ளன. அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருல் கட்டிப் புறந்தோல் போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலே. (திருவாசகம்) மனித தேகம் தோன்றியுள்ள நிலையை இது துலக்கியுளது. சும்மா தனுவருமோ? சும்மா பிணிவருமோ? சும்மா வருமோ சுகதுக்கம்? --- நம்மால்முன் செய்தவினேக்கு ஈடாச் சிவனருள்செய் விப்பதென்ருல் எய்தவனே நாடி யிரு. (சிவபோகசாரம்) தாம் செய்த வினைகளின்படியே சீவர்கள் உலகில் தோன்றி யுள்ளனர்; வினைப்போகங்களை அவர்கள் உண்டு வருவதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/35&oldid=1326996" இலிருந்து மீள்விக்கப்பட்டது