பக்கம்:தரும தீபிகை 7.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 234.h சிவபெருமான் சாட்சியாய் கின்று கண்டு வருகிருன் என இது காட்டியுள்ளது. சீவ சாட்சி திவ்விய மாட்சியாப் கின்றது. முன்பு இழைத்த வினைகளினலேயே உழைத்துப் பிழைத்து உழந்து வருகிற இந்தப் பிறப்பு வந்துள்ளது. துன்பமும் கவலை களும் தொடர்ந்து வருகின்றன. இன்பமும் அமைதியும் இடையிடையே சிறிது தோன்றி மறைகின்றன; அல்லலான இந்தப் பிறவித் தொல்லைகள் ஒழிய வேண்டுமானல் உள்ளத்தை வேறு பொல்லாத புலைகளில் அலையவிடக் கூடாது; நல்ல கிலே யிலேயே ஒரு முகமாய் நிறுத்தின் வினைகள் யாதும் விளையா; அவை விளையாதுஒழியின்பிறவிதீர்ந்துபேரின் பங்களேஉளவாம். விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன்கயிலைப் பதியார் துடைப்பும்கம் பால் அணுகாது பரானந்தமே கதியாகக் கொண்டுமற்று எல்லாம்துயிலில் கனவெனே மதியா திருமனமே! இது காண்கன் மருந்துனக்கே. (பட்டினத்தார்) அல்லல் யாவும் நீங்கி அதிசய ஆனந்தம் அடையவுரிய ஒரு நல்ல வழியைப் பட்டினத்தார் தம் உள்ளத்தை நோக்கி இவ் வாறு உரைத்திருக்கிரு.ர். மனம் புலன்களில் அலைய சேர்ந்தால் புலையான வினைகள் விளைந்து வரும்; அவ்விளைவால் தொலையாத துயரங்கள் தொடர நேரும் ஆதலால் அவ்வாறு தொடராதபடி தம் சிந்தைக்கு நல்ல சிந்தனையை நயமா நன்கு தந்தருளினர். வினேப்பயனே வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை--கினேப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலேபடேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க்கு இல்லை விதி. (கல்வழி, 37) விதியை யாராலும் வெல்ல முடியாது; அது விளையாதபடி கம் உள்ளத்தை உண்மையான பரம் பொருள்மேல் செலுத்தி வரின் அவர் விதியை வென்றவராய்க் கதிபெறுகின்ருர் என ஒளவையார் இவ்வாறு அருளியிருக்கிருர் விதியை வெல்லுதற்கு கம் மூதாட்டி காட்டியிருக்கும் காட்சி கருதி யுணரவுரியது. மனம் அடங்கிவரின் வினை ஒடுங்கி விடும். 294

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/36&oldid=1326997" இலிருந்து மீள்விக்கப்பட்டது