பக்கம்:தரும தீபிகை 7.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2662 த ரும தி பி ைக எவ்வுயிர்க்கும் எவ்வழியும் தண்ணளி புரிந்து வருபவர் புண்ணிய ஞானிகளாய்ப் பொலித்து வருகிரு.ர். ஞானமும் கருணையும் வானுயர் இன்பங்களே நேரே வளர்த்து வருகின்றன. When wisdom entereth into thine heart, and knowledge is pleasant unto thy soul. s (Bible) உனது இதயத்தில் ஞானம் உதயமாகும் பொழுது உன் ஆன்மாவுக்கு அது பேரின்பம் ஆகிறது என்னும் இது இங்கே அறிய வுரியது. அறிவு தெளியவே ஆனந்த ஒளி வீசுகின்றது. மெய்யுணர்வால் வைய மையல் நீங்குகிறது; நீங்கவே மேலான இனிமைகள் தனியே விளக்க ஓங்கி வருகின்றன தத்துவ ஞானம் தனிமை இனிமையாய்ப் புத்தமுத போகம் புரிதலால்---முத்தரங்த ஆனந்த வாழ்வில் அமர்ந்து மகிழ்சிறந்து மோனங் தழைந்துள்ளார் முந்து. இனிமை விளைவுகளை இனித தெளிக்க கொள்க. 988. கடலில் அலைகள் கலித்த திரைபோல் உடலுயிர்கள் ஓங்கி ஒடுங்கும்-அடல்கொள் பரத்தில் எனும்உண்மை பார்த்துத் தெளிந்து வரத்தில் உறைக வரைந்து. )ع( இ-ள். கடலில் அலைகள் கலித்து எழுந்து மறைதல் போல் உடல் உயிர்கள் பரத்தில் தோன்றி மறைகின்றன; இந்த உண்மையை உணர்ந்து உறுதி நலனைத் தெளிந்து உய்தி பெறுக என்பதாம். பலவகை கிலைகளில் பரக்க விரிந்து தோன்றுகிற உலக உயிர்களுக்கு உரிய மூல நிலையை இதில் உணர வந்துள்ளோம். கானுகின்ற காட்சிகளைக் கருதி ஒர்ந்து உறுதியான உண்மையை ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிவது உயர்க்க ஞானமாம். யூக விவேகங்கள் மாய மோகங்களால் மயங்கி யிருக்கும் வரையும் மெய்யை உணர முடியாமல் தியங்கி கிற்கின்றன. மயக்கம் தெளிந்தால் மனித அறிவு புனித ஞானமாய்ப் பொலிக்க விளங்கு கிறது. ஒளிமுன் இருள் போல் அதன் முன் மருள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/353&oldid=1327316" இலிருந்து மீள்விக்கப்பட்டது