பக்கம்:தரும தீபிகை 7.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2698 தரும பிே கை மூடுபற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால் விடு பெற்றவர். (இராமா, இரணியன் 81) விடு பெற உரியவரை இவை விளக்கியுள்ளன. குறிப்புகள் கூர்ந்து நோக்கவுரியன. கீத்தார் என்று துறவிகளுக்கு ஒரு பெயர். யாவும் விட்டவர் என்பதை அது விளக்கியுளக. உடல் உறவுகளை சீத்தவரே பிறவிக்கடலை நீந்திப் பேரின்பம் பெறு கின்ருர். விடாதவர் விழுந்தார்; விட்டவர் எழுந்தார். துன்பங்களிலேயே தொடர்ந்து படர்ந்த வந்த சீ வ ன் இன்ப நிலையமான ஈசனே அடைந்து இனிது மகிழ்ந்திருத்தலே மோட்சம் என வந்தது. சரியான பரிபக்குவம் அடைந்தபோது தான் உயிர் பரமனை மருவுகிறது. பரமபுருடைேடு இரண்டறக் கலந்து இன்புறுதலால் வேனே நாயகி என்றும் சிவனை நாயகன் என்றும் கூறுவது மரபு. இதனை நாயகி நாயக நேயம் என்பர். பெண் பேதையாயிருக்கும் போது நானுவதில்லை; யாரோ டும் கூசாமல் பேசிப்பழகுவள்; பருவம் அடைந்ததும் வெளியே வரக் கூசுவள். முன்பு மறையாமல் திறந்து திரிந்த கொங்கை களைப் பின்பு நன்கு மூடி எங்கும் யாரும்காணுதபடிபேனுவள். அவ்வாறு காணிப் பேணி வந்தவள் மணந்த கணவனிடம் யாதம் கூசாமல் தேகம் முழுவதையும் ஏகபோகமாக் தக்து இனிது கலந்து இன்பம் மீதார்.வள். இந்தப் பெண்மைகிலே ஞானிகளு டைய உண்மை கிலேயோடு உரிமை தோய்ந்து ஒப்பாயுள்ளது. யாதும் உணராமல் பேதையாயிருக்கும் போது மனிதன் எதும் காணுமல் எங்கும் கூசாமல் திரிகிருன்; அந்தப் பேதைமை நீங்கிப் புத்தியறிந்து மெய்யுணர்வு தோன்றில்ை முன்பு கச்சித் திரிந்த கொச்சையான பொறி புலன்களின் நுகர்ச்சிகளில் அரு வருப்பு அடைக்க ஒதுங்குகிருன். யாரோ டும் பேசாமல் மோன மாய்த் தனியே இருக்கிருன் பருவமங்கை போல் உரிய ஒரு நாயகனைக் கருதி உருகுகிருன் ஞானமும் அன்பும் பெருந்தனங் களாய்ப் பெருகியிருத்தலால் எவரிடமும் கெருங்காமல் எகாக்க மாய்த் தங்கி ஏகநாயகேைய எண்ணி யோகம் மருவியுள்ளான். ஞான யோகியின் நிலை மான மங்கை போல் மருவி மருமங்கள் பெருகி யிருப்பது இங்கே கருதி யுனா வுரியது. முலைமுதிர நாணம் முதிரும் மகள்போல் க்லமுதிர ஞானம் கனிந்து-தலைமகனேக் கூடிக் களிக்கும் குணமே மணமாக ஆடிக் களிக்கும் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/389&oldid=1327352" இலிருந்து மீள்விக்கப்பட்டது