பக்கம்:தரும தீபிகை 7.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 26.9% ஞான சீர்மையின் சீர்மையை இதில் கூர்மையா ஒர்க் து கொள்கிருேம். முலை முதிர்வில் நாணம் விளைகிறது; கலைமுதிர்வில் ஞானம் கனிகிறது. அந்த நாணம் மானத்தைக் காப்பாற்றிப் பெண்மையை மகிமைப்படுத்தி இன்புறுத்துகிறது; இந்தஞானம் வேனைப் பாதுகாக்துத் திவ்விய பேரின் பத்தை அருளுகிறது. உலக ஆசைகள் யாவும் அற்றுப் பொறி புலன்களை அடக்கி ஈசனையே கருதி உருகுவது ஞானிகளுடைய இயல்பாயிசைந்தது. என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து அன்புருவாய் கிற்க அலந்தேன் பராபரமே ! (1) சுத்த அறிவாய்ச் சுகம்பொருங்தின் அல்லால் என் சித்தம் தெளியாது என்செய்வேன் பராபரமே ! (2) சொல்லால் அடிங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின் அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே ! (5) டிாரு அனுபூதி வாய்க்கின் அல்லால் என்மயக்கம் தேருது என்செய்வேன் சிவமே பராபரமே. (4) இரவுபகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் வரவும் திருக்கருணை வையாய் பராபரமே. - (5) இறைவனே நோக்கிக் தாயுமானவர் இவ்வாறு உருகி உரை யாடியிருக்கிருர், இரவு பகல் அற்ற இடம் என்றது. பரமானக்க விட்டை. சிவானந்த போகத்தை எண்ணி இவர் எங்கியுள்ள கிலை ஈங்கு அறிய வந்தது. பத்தியும் துறவும் முத்தியை மருவின. அராப்புனே வேனியன் சேய் அருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால் குராப்புனே தண்டையம் தாள்கொழல்வேண்டும் கொடியஐவர் பாாக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல்வேண்டும் என்ருல் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே. (கந்தரலங்காரம், 74) பேரின்ப விடு பெறுதற்கு அரியது என அருணகிரிநாதர் இவ்வாறு கூறியிருக்கிருர். பரமன்பால் போன்பு பூண்டு அவனு டைய அருளைப் பெற வேண்டும், பொறிபுலன்கள் அடங்க வேண்டும், உள்ளம் ஒடுங்கி உயர் ஞானம் ஓங்க வேண்டும்; இவ்வளவும் செவ்வையாஅமைந்த போதுதான் திவ்விய ஆனக்க நிலையை அடையலாம் என இவர் உறுதியா முடிவுசெய்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/390&oldid=1327353" இலிருந்து மீள்விக்கப்பட்டது