பக்கம்:தரும தீபிகை 7.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2706 த ரும தீபிகை இவ்வுலக வாழ்வு துன்பம் மிக வுடையது; ஆகவே கிலே யான இன்ப விட்டை அடையும் நெறியினை விரைந்து கானுங் கள் என நன்கணியார் என்னும் சங்கப்புலவர் இங்கனம்போதித் திருக்கிரு.ர்.இன்னமைகாணுமல் இனிமைகாண்பதே மகிமைஆம். உடல் அளவில் உள்ள உயிர் கடல் அளவு துயரங்களைக் கண்டு வருகிறது. நினைவுகளில் இருந்தே வினைகள் விளைந்தன; அந்த வினைகளின் பயன்களை நுகர்ந்த கழிக்கவே பிறவிகள் எழுந்தன. பிறப்பில்லாத பரமனிடமிருந்து பிரிக் து வந்து பிறவி களில் விழுந்து வேன் துயர்களில் தோய்ந்து தடிப்பது மாயா விசித்திரமா மருவி யுள்ளது. மாயமருள்தெளிவதுதாயஒளியாம். முக்தி சொந்தமா நின்ற சுக நிலை என்ற த சீவனத இயல் பான உண்மை நிலையை ஒர்ந்து சிந்திக்கவந்தது. ஆனந்த கிலேய மான அந்தப் பரஞ்சோதியின் இனம் என்று தன்னை உணர்ந்து தெளிய நேர்ந்தால் மயலாய் விளைந்த இழி துயரங்கள் எல்லாம் அயலேஒழிந்துபோய்விடும். போகவேஉயர் சுகம் ஒளிவீசிவரும். சிங்தை தெளிந்தால் சிவன் சிவய்ை அந்தமில் இன்பம் அடைந்து மகிழும் தந்தையும் தாயும் கனேயனும் ஆகி வந்த பிறவி வரவுகள் மறையும். என்ற தகுல் மெய்யான சிந்தனையின் மேன்மை தெளிய லாம். சித்தம் தெளியப் பித்தம் ஒழிகிறது. உத்தம உணர்வுகள் ஒளி வீசி எழுகின்றன. அந்த ஒளி ஆனந்த வெளியாகிறது. சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்; சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தம் சிவம்.ஆக வேசிக்கி முத்தியாம் சித்தம் சிவம் ஆதல் செய்தவப் பேறே. (திருமந்திரம்) வேன் சிவமாய் முத்திபெறும் நிலையைத் திருமூலர் இவ் வாறு கூறியிருக்கிருர் தாயபரம் பொருளின் உறவு என்று உயி ரை உணர்ந்து உள்ளம் உயரும் ஆனல் துயரங்கள் யாவும் தொலைந்து போம். இயல்பான இன்பம் எங்கும் விளங்கும். இருவினை தாம் வரும் யான் எனலால் அவ் இருவினை யால்வரும் இன்பொடு துன்பம்: இருவினை யான் எனல் இன்றெனில் இல்லை; இருவினை இல்எனில் இல்லை பிறப்பே. (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/397&oldid=1327360" இலிருந்து மீள்விக்கப்பட்டது