பக்கம்:தரும தீபிகை 7.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2349 தக்கை கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மைந்தன் வருக்கினன்; தெரியாமல் செய்து விட்டேன் என்று மறுகி வணங்கித் தாதையிடம் விடைபெற்று மீண்டு வந்தான். அந்த அன்னக்குஞ்சை எடுத்துக் கொண்டு போய்ப் பழைய இடத் தில் சுகமா விட்டு மீண்டான். அறியாமல் அவம் செய்துவிட் டேனே என்று மனம் கவன்முன்; உடனே அரசைத் துறந்து தவம் செய்யப் போனன். அவனே பின்பு ஏமாங்கத நாட்டு மன்னன் மகனுய்ப் பிறந்தான். முன்னம் பறவைபால் செய் திருந்த சிறிய ஒரு தீவினையால் பிறந்தபோதே தாயைப் பிரிந்து பருவம் வரும் வரையும் மறைவாயிருக்கான். சீவகன் என்று சிறந்த கீர்த்தியோடு உயர்ந்திருக்கவன் சரிதம் இ வ் வ ற பிறந்து வந்துளது. பிறவிகள்விதியின் உறவுகளை அறிவிக்கின்றன. தான் செய்தவின கன்னவந்து பற்றிக்கொள்ளும்; அதனை அனுபவியாமல் எவனும் தப்பமுடியாது என்பதை இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். வினைகள் எவ்வழியும் தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வந்து தம் பயன்களை ஊட்டிவிடும் என்ப தைக் காவிய சீவியங்கள் யாவும் ஒவியமாக் காட்டியுள்ளன. ஒடிப் பறந்தே உழந்தாலும் ஊழ்வினேதான் கூடிப் புகுந்து குலாவலால்--காடித்தான் உள்ளியதைக் கொள்ள உருதுகாண் உள்ளாதும் துள்ளிமுன் நிற்கும் தொடர்ந்து. இதனை உள்ளி உணர்ந்து ஊழ்நிலை தெளிக. ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினே இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி ஒட்டுங் காலே ஒழிக்கவும் ஒண்ணு. (சிலப்பதிகாரம், 10) உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா: பெறற்பால் அன்ேயவும் அன்னவாம்; மாரி வறப்பின் தருவாரும் இல்லே அதனேச் சிறப்பின் தணிப்பாரும் இல், (நாலடி, 104) விதியின் அதிசய நிலைகளை இவை விளக்கியுள்ளன. _க _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/40&oldid=1327001" இலிருந்து மீள்விக்கப்பட்டது