பக்கம்:தரும தீபிகை 7.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2350 த ரும தீபிகை 895, இன்பம் உறவேண்டின் எவ்விடத்தும் கல்வினையே அன்போ டயராமல் ஆற்றுக-என்பலனும் செய்த வினேஅளவே சேரும் அயல்ஒன்றும் * எய்த வருவ திலே. H (டு) இ-ள். இன்பமே பொருக்க விரும்பின் எங்கும் என்றும் நல்ல வினைகளையே நயந்து செய்க; செய்த வினையின் அளவே பலன்கள் எய்த வருகின்றன; வேறு வகையில் யாதும் வருவது இல்லை; இந்த உண்மையை உணர்ந்து உறுதியை காடிக் கொள்ளுக. இருளில் வழி நடப்பவனுக்கு விளக்கு ஒளி தக்து உதவி புரிகிறது; அதுபோல் மருளான உலக வாழ்க்கையில் மருவி யிருக்கின்ற மனிதனுக்கு அ றி வு நெறிமுறைகளை விளக்கிக் தெளிவு கருகின்றது. சென்றதும் நிகழ்வதும் வருவதும் ஆகிய மூன்று காலநிலைகளையும் ஊன்றியுணர்ந்து தன் உயிர்க்கு உறுதி நலம் காண்பவன் உயர்ந்த மதிமானப்ச் சிறந்து திகழ்கிருன். மனித சமுதாயத்தில் பலவகையான மாறுபாடுகள் காணப் படுகின்றன; படவே இந்தப் பிறவிக்கு முந்திய பிறவியின் தொடர்புகள்தோய்ந்திருப்பதை ஒர்த்துஉணர்ந்து கொள்கிருன். காலையில் வேலை செய்தால் மாலையில் கூலி கிடைக்கிறது. வேலைசெய்யாமல் சோம்பியிருந்தால் கூலி கிடையாது. முன்னே நல்ல வினைகளைச் செய்திருந்தவர் செல்வர்களாய்த் தோன்று கின்றனர்; அவ்வாறு செய்யாதவர் வறியராப் கிற்கின்ருர். இப்பிறவியில் ஊக்கி முயன்ருலும் ஆ க் க ங் க ளே அடைந்து கொள்ளலாம். ஊழின் வழியே வாழ்வுகள் வளம் பெற்று வருகின்றன. கதி நீர் பரந்துவரின் பயிர்கள் வளமாய் வளர்ந்து வரும்; அதுபோல் விதி நீர் விரிந்துவரின் உயிர்கள் சுகமாய் வாழ்ந்து வரும். ஊழ் ஊட்ட உயிர்கள் உண்டு வருகின்றன. "ஊழ்எனப் பட்ட தாழ்புனல் படுகளில் தெய்விகம் முதலாச் செப்புமும் மதகும் ஒவ்வொரு மதகா யுடனுடன் திறந்து தாகம் என்னும் தனிப்பெருங் காலில் போகம எனனும புதுபபுனல் கொணர்ந்து பாயுமஐம பொறியாம வாய்மடை திறந்து =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/41&oldid=1327002" இலிருந்து மீள்விக்கப்பட்டது