பக்கம்:தரும தீபிகை 7.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2351 பருவம் பார்த்து வரன்முறை தேக்கலும் இதத்துடன் அகிதம் எனுமிரண்டு ஊற்றில் புதுப்புனல் பெருகிப் புறம்பலத்து ஒட வார்புன லதனே மந்திர முதலா ஒரறு வகைப்படும் ஏரிகள் கிரப்பி விளேவன விளேய விளைந்தன அறுத்தாங்கு ஒரு களம் செய்யும் உழவன் ஆகி மாநிலம் புரக்கு மாசிலாமணி." (பண்டாரமும்மணி, 11) ஊழ் என்னும் பெரிய குளத்திலிருந்து தண்ணிர் பாய்ந்து வருதலால் உயிர்கள் ஆகிய பயிர்கள் செழித்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றன என்று இது குறித்துள்ளது. இதில் அமைந்துள்ள உருவக நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வுயிர்க்கும்.இதமான இனியகாரியங்களை ஒருவன் செய் கால் அவை கல்வினையாய் ஒங்கி அவனுக்கு எவ்வழியும் இன்பங் களே அருளுகின்றன. நெல்லை விதைத்தவனுக்கு நல்ல அரிசி கிடைக்கிறது; அது போல் கல்லதைச் செய்தவனுக்கு கலங்கள் பல வருகின்றன. அல்லதைச்செய்தவன்.அவலமே அடைகிருன். காம் செய்த கருமங்களின் வழியே சீவர்களுக்குச் சுக தக்கங்கள் உளவாகின்றன. சல்ல கருமம் செய்தவன் கரும வான் ஆகின்ருன்: ஆகவே அவன் யாண்டும் இன்பமும் மேன் மையும் பெறுகின்ருன். அல்லல் நேரினும் நல்லதே காண்கிருன். ஆடகச் செம்பொற் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணிர் கடடகம் கொண்ட வாழ்நாள் உலந்ததேல் கொல்லும்; பவ்வத் து.ாடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் கல்லார் பாடகம் போலச் சூழ்ந்த பழவினேப் பயத்தின் என்ருன். (சீவகசிந்தாமணி, 510) தங்கக்கிண்ணத்தில் கண்ணிர் பருகுங்கால் ஒரு அரசன் விக்கிச் செத்தான்; அதே சமையத்தில் கப்பல் உடைந்து கட விடையே வீழ்ந்த ஒரு மனிதன் தப்பிப் பிழைத்துக் கரை எறி வந்து வாழ்க்கான்; அந்தச் சரித்திரங்களை இது விசித்திரமா விளக்கியிருக்கிறது. பழவினையின் விளைவுகள் அளவிடலரியன: அதன்வழியேயாவும் நடந்துவருகின்றன என்பது தெரிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/42&oldid=1327003" இலிருந்து மீள்விக்கப்பட்டது