பக்கம்:தரும தீபிகை 7.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2352 த ரும தீபிகை தலைஎழுத்து என்பது வி தி க் கு ஒரு பெயர். முன்னமே செய்த கருமங்களின் படியே பிறப்பிலேயே பிரமா வேர்களை வரைந்து விடுகிருன். அந்த எ ழுத்தின் வழியே இன்ப துன்பங் களை யாவரும் நுகர்ந்து யாண்டும் தொடர்ந்து வருகின்றனர். அழுதால் பயன் என்ன கொந்தால் பயன் என்ன ஆவதுஇல்லை . தொழுதால் பயன் என்ன கின்னே ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயன் என்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப் படிவரு மோசலியா திருஎன் ஏழைநெஞ்சே! (பட்டினத்தார்) விதி எழுதிய படியே யாவும் நடைபெறும் எனத் தம் நெஞ்சை நோக்கிப் பட்டினத்து அடிகள் இவ்வாறு கூறியிருக்கின்ருர். செய்த வினையின் படியே பலன்கள் எய்த வருகின்றன. நல்ல நினைவுகளோடு நல்ல வினைகளைச் செய்பவனே எல்லா வழி களிலும் சிறந்து இன்ப கலங்களை அடைந்து மகிழ்கின்ருன். நல்ல சுகமாக நாளும்நீ வாழ்ந்துவர நல்ல வழிஒன்று நாடிைே--அல்லலே எவ்வழியும் எவ்வுயிர்க்கும் என்றுமே எண்ணுதே அவ்வழியே ஆனந்தம் ஆம். இன்பம் விளையும் நிலையை இது இனிது விளக்கியுள்ளது. இதனைக் கருதியுணர்ந்து உறுதியோடு ஒழுகி உயர்ந்து கொள்ள வேண்டும். அல்லது கடிந்து நல்லது புரிந்து நலம் பல பெறுக. 896. அடுசிலையில் நின்றெழுந்த அம்புபோல் செய்த கொடுவினையின் துன்பம் கொதித்துக்-கடிதேறித் தப்பாமல் நேரே தவருமல் தாக்குமே அப்போது கோதல் அவம். (சு) இ-ள். எய்த வில்லில் இருந்து விடுபட்டு எழுந்த பாணம்போல் செய்த வினையிலிருந்து சீறி எழுங்க துன்பம் எவ்வழியும் யாதம் த ப் பா ம ல் தாக்கி வருத்தும்; அப்பொழுது வருந்துவதால் யாதொரு பலனும் இல்லை; எப்பொழுதும் இதனை உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/43&oldid=1327004" இலிருந்து மீள்விக்கப்பட்டது