பக்கம்:தரும தீபிகை 7.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2354 த ரும தீ பி. கை நல்ல தவத்தால் எல்லா கலங்களையும் எய்தியிருந்த இலங்கை வேந்தன் பின்பு பலர்க்கும் அல்லல் புரிந்தான்; முடிவில் சீதை யின் உள்ளம் கொதிக்கச் செய்தான்; அதனல் அடியோடு அழிய நேர்ந்தான். விதியின் விளைவுகள் வியப்புகளை விளைத்து எங்கும் வியன நிற்கின்றன. அதன்ஆற்றல்கள்.அளவிடலரியன. தந்தை விரும்பியபடி அரசுரிமையை அடைய இராமன் இசைந்தான். முடிசூட்டு விழாவுக்குப் பலதேசங்களிலுமிருந்து அரசர்கள் வந்தனர்; நகரம் அதிசய நிலையில் அலங்கரிக்கப் பெற்றது. எவ்வழியும் இன்பக் களிப்புகள் பொங்கி எழுந்தன. அவ்வமையம் அரசமாளிகை மேல் ஏறி நிலா முற்றத்தில் கின்று இராச விதிகளைக் கூனி பார்த்தாள்; அவள் அங்கே தோன்றி கின்ற தோற்றத்தைக் காவியநாயகன் ஒவியமா வரைந்து காட்டி யிருக்கிருர்; அந்தக் காட்சியை அயலே காண வருகிருேம். அந்நகர் அணிவுறும் அமலே வானவர் பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்வையில் இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினுள். (இராமா, மந்தரை, 39) இக்கவியின் சுவையைக் கருதிக் காண வேண்டும். வினே யின் விளைவை இனிது விளக்கியுள்ளது. இலங்கை தென் திசை யில் இருக்கிறது; அயோத்தி வடகோடியில் உளது; இடைவெளி ஆயிரத்து எழுது அறு கல் கடை வழியாய் கிற்கிறது. இங்ககளின் உபரிகையில் ஏறி நின்றுள்ள அக்கிழவி இராவணனுடைய தீவினை நிழல்போல் நீண்டு தோன்றினுள் என்றது ஆன்ற பலபொருள் கள் தோன்ற கின்றது. மேலிருந்து கீழ் இறங்கியதும் கூனி கைகேசியிடம் கோள் மூட்டுவாள்; கொடுமை விளையும்; இரா மன் மணிமுடி குடான், சடை முடியகுய்க் காட்டுக்குப் போவான்; சீதையும் தொடர்ந்து போவாள்; அவளை இடையே இராவணன் கவர்ந்து செல்வான்; அகனல் அவன் குலத்தோடு அழிந்து ஒழிவான்; இக்க அழிவுகளே எல்லாம் தெளிவாய்த் தெரிய இவ்வுவமை வந்தது. வினையின் வரவு நினைவுற அரியது. இன்னல் செய் இராவணன் என்ற்து இனிய செய்து சுக மாப் வாழ் து வகதவன் இன்னலோடு அழிய சேர்க்கமைக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/45&oldid=1327006" இலிருந்து மீள்விக்கப்பட்டது