பக்கம்:தரும தீபிகை 7.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2360 த ரும தீ பி. கை கொடிய வறுமையில் நெடிய துயராய் மறுகியிருந்த நான் முடிவில் காசிவிசுவநாதரைக் கண்டு பாடினேன்; தெய்வத்திரு எய்தி இருமையும் இன்புற்றேன்; நீயும் போய்ப் பாடி குபேர சம்பத்தைப் பெறுக என ஒரு புலவர் மற்று ஒருவருக்கு வழி காட்டியிருப்பதை இது தெளிவாக் காட்டியுள்ளது. காவென்றும் சிங்தா மணி என்றும் எேன்றன் கையில்அள்ளித் தாவென்றுரைக்கத் தரித்திரம் பின்சென்று தள்ளின&னப் போஎன்றுரைக்கவும் நாணம் அங் கேஎன்ன போவது இங்கு வாஎன்று இழுக்கவும் வங்தேன் விராலி மலைக்கங்தனே. (மங்கைபாகர்) பிறரைப் புகழ்ந்து பாடிப் பொருள் பெறும்படி வறுமை தள்ள, மானம் தடுக்க மறுகி நின்ற புலவர் முருகன் சங்கிதியில் வந்து இவ்வாறு உருகி முறையிட்டிருக்கின்ருர். நல்ல கல்வியறி வுடையவர் பொருள் இல்லாமல் வருந்துவதை இவற்ருல் அறிந்து கொள்கிருேம். புலவர் வறுமை என்பது பழமொழியாய் வங் துள்ளது. புலமையும் வறுமையும் உறவுரிமைகளாய் உள்ளன. “Poverty is the muses' patrimony.” [Burton] வறுமை கவிஞரின் பரம்பரை உரிமை என இது குறித்துளது. கல்விச் செல்வம் உடையவர் உலகப் பொருளைப் பெரும் பாலும் அடையாமல் இருப்பது எங்காட்டிலும் இ ய ல் ப ா யுள்ளது. இரீஸ் தேசத்தில் பிறந்த ஹோமர் (Homer) என்பவர் சிறந்த கவிஞர். அவர் இயற்றியுள்ள காவியத்தை உலகமொழி கள் பலவும் உவந்து போற்றுகின்றன. கோடிக் கணக்கில் புத்தகங்கள் செலவாகியுள்ளன. அத்தகைய பெரிய கவிஞர் வறிஞராய் வாழ்ந்துள்ளார். உண்ண உணவு இல்லாமல் பட்டி னியும் கிடந்திருக்கிருர். அவர் இறந்து போனபின் யாவரும் உரிமை கொண்டாடிப் புகழ்ந்து துதிக்கின்ருர். தாமஸ் ஹீவுட் என்பவர் அந்த நிலையைக் குறித்து வருக்தி வரைந்துள்ளார். Seven wealthy towns contend for Homer dead, Through which the living Homer begged his bread. (Seward) ஹோமர் உயிரே ாடு இருக்கும் போது சோ ற் றக்குத் திண்டாடினர்; இறந்துபோன பின் சிறந்த எழுநகரங்கள் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/51&oldid=1327012" இலிருந்து மீள்விக்கப்பட்டது