பக்கம்:தரும தீபிகை 7.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2368 தரும பிேகை மதியின் பிழைஅன்று; மகன்பிழை அன்று; மைந்த! விதியின் பிழை நீ இதற்கு என்னேவெகுண்டது என்ருன். (இராமா, நகர், 183) அரசாளும் விதி இப்பொழுது எனக்கு இல்லை; காட்டுக் போகவே என் தலை எழுத்துஉள்ளது; பிறர் எவர் மீதும் பிழை கூறலாகாது; அமைதியாயிரு என்று தன் கம்பியை இங்கம்பி இங்கனம் அடக்கியிருக்கிருன். இந்த அருமைப் பாசுரத்தின் பொருளையும் சுவையையும் துணுகி உணர்ந்து இனிது நுகர வேண்டும். பெரியவன் வாய்மொழி அரிய ஒளிகளை விசியுளது. எவரையும் விதி விடாது; எவ்வளவு மதியுடையராயினும் விதியை வெல்லமுடியாது. விதி வழியே மதி என்பது பழமொழி. அந்த மூதுரையின் படியே யாவரும் வாழ நேர்ந்துள்ளனர். முதிர்கரு தவமுடை முனிவர் ஆயினும் பொதுவறு திருவொடு பொலிவர்ஆயினும், மதியினர் ஆயினும், வலியர்ஆயினும், விதியினே யாவரே வெல்லும் நீர்மையார்?" (கந்தபுராணம்) விதியினை வெல்ல வல்லவர் யாரும் இல்லை; அது வகுத்தபடி கான் எவரும் வாழமுடியும் என இது வரைந்து காட்டியுளது. அதிசயம் ஒருவரால் அமைக்க லாகுமோ? துதியறு பிறவியின் இன்ப துன்பம்தான் விதிவயம் என்பதை மேற்கொளாவிடின் மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ? (1) தெரிவுறு துன்பம்வங் துான்றச் சிங்தையை எரிவுசெய்து ஒழியுமது இழுதை சேதால், பிரிவுசெய்து உலகெலாம் பெறுவிப் பான் தலை அரிவுசெய் விதியினர்க்கு அரிதுண்டாகுமோ? (2) அலக்கணும் இன்பமும் அணுகுநாள் அவை விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ? இலக்கமுப் புரங்களே எய்த வில்லியார் தலைக்கலத்து இரந்தது தவத்தின் பாலதோ? (3) பொங்குவெங் கோளரா விசும்பு பூத்தன வெங்கதிர்ச் செல்வனே விழுங்கி நீங்குமால்; அங்கண்மா ஞாலத்தை விளக்கும் ஆப்கதிர்த் திங்களும் ஒருமுறை வளரும் தேயுமால். [4]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/59&oldid=1327020" இலிருந்து மீள்விக்கப்பட்டது