பக்கம்:தரும தீபிகை 7.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 250's எடுத்துக் காட்டியுள்ளது அயன் கலையைக் கிள்ளியதால் சிவன் பலி எடுக்க நேர்ந்தான்; மாலும் மாலால் மறுகியுழன்ருன். விருந்தை என்பவள் சலந்திரன் மனைவி; அதிசய அழகி; அவள் மேல் மால் மால்கொண்டான்; வஞ்சம் புரிந்து அவ் வஞ்சியை மருவினன்; அவள் நெஞ்சம் தெளிந்து சினந்து சபித்தாள். அக் கற்பாசி கடுத்து வைததை அயலே கானுக. பொற்புறு கணவனே ப் போல வங்துள&னப் பற்பகல் புணர்ந்தனே! பகைவர் மாயையால் கற்புடை மனேவியைக் கவர்ந்து போகே சொற்படு பழியினைச் சுமத்தியால் என்ருள். (கந்த, ததிசி, 291) அந்தப் பத்தினியிட்ட சாபம் மாயன மருவி நின்று விதி யாய் நீண்டு பின்பு இராமனை வே த னை செய்ய மூண்டது. பருவத முனிவர் சாபமும் அதனேடு கூட நேர்ந்தது. தன்னை இன்னன் என்று அறியாமல் மயங்கி மாயன் இன்னலுழந்து திரிவான் என்பது இராமாவதாரத்தில் முடிவாய் கின்றது. கன்னி யங் துழாய்க் கமலலோ சனன்.தய ரதற்கு மன்னு கன்மகன் ஆகியே வந்தனன் உதித்து முன்னே அந்தகா ரத்தில்ை மூடிடப் பட்டுத் தன்னை மாயன் என்று அறிந்திடா துறைந்தனன் சார்ந்தே. (இலிங்கபுராணம், உத்தா, அம்பரி 85) நெடியோன் மயங்கி கிலமிசைத் தோன்றி அடலரு முந்நீர் அடைத்த ஞான்று. (மணிமேகலை, 17) விதியின் கங்தை விதிவசமாய் வந்துள்ளமையை இவற்ருல் உணர்ந்துகொள்ளுகிருேம். ஊழின்குழ்வுஒர்ந்து சிந்திக்கவந்தது. அரசுரிமையை இழந்து இராமன் காட்டுப் போக நேர்ந்த போது இலக்குவன் வெகுண்டு மூண்டு வில்லோடு விரைந்து வந்து 'அரசர் பெரும! இக்க முடிசூட்டு விழாவுக்கு இடையூறு செய்தவரை அடியோடு அழித்து நான் உங்களுக்கு o மணிமுடி சூட்டுவேன்” என்று வீராவேசமாய்க் கூறினன். அப்பொழுது அந்த அருமைத் தம்பியை நோக்கி இக்குல மகன் சொன்னது உலக வுள்ளங்களை உருகச்செய்தது. விதி நிலையை விளக்கி மதி நலத்தோடு மொழிந்த அதனை அயலே காண வருகிருேம். கதியன் பிழையன்று நறும் புனல் இன்மை அற்றே பதியின் பிழை அன்று; பயம்து கமைப்பு தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/58&oldid=1327019" இலிருந்து மீள்விக்கப்பட்டது