பக்கம்:தரும தீபிகை 7.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2366 த ரும பிே கை ஆகவே மதியால் மதித்து என்னும்? விதியை விளைக்கின்ற வினே யை விரிக்காமல் நீ அடக்கினல் அது கதியை நேரே காட்டி யருளும்; இந்த மருமக்கை அறிந்தால் மகிமை பெருகி வரும். விதியும் மதியும் கதியும் இங்கே காண வந்துள்ளன. மதியால் மனிதர் மாண்புற்று வருகின்றனர்; வரினும் இக்க மதி அக்க விதியின் வழியே வேலை செய்து வருகிறது. மூண்ட விதி நீண்ட வலியுடையது; யாண்டும் ஆண்டவனாகவே அதிசய நிலையில் அது அமைந்துள்ளது. அது காட்டி ஊட்டிய படியே யாவும் கண்டு உண்டு களித்து வருகின்றன. பிரமாவுக்கு விதி என்று ஒரு பெயர்; எல்லா வுயிர்களையும் முறையே படைப்பவன் என்பது அதன் பொருள். யாவும் விதிக்கின்ற அந்தச் சிருட்டி கருத்தாவும் விதியை விலக்க முடி யாது. ஆகவே விதியின் வலிமையும் அதன் கிலைமையும் எவ்வளவு அதிசயமான தலைமையில் உள்ளன என்பதை உணர்ந்து கொள் ளலாம். மூண்ட விதி வழியே முடிவுகள் நீண்டு வருகின்றன. விதி பெரிதா? மதி பெரிதா? இப்படி ஒரு கேள்வி பண்டு தொட்டே ஒரு முதுமொழி யாப் ஈண்டு மூண்டு வந்துள்ளது. விதிக்கும் மதிக்கும் நெருங் கிய ஒர் உறவு நிலைத்திருப்பதை இது உணர்த்தி கிற்கிறது. மனத்திலிருந்து கிளைத்து எழுகின்ற கினேவின் வழியே a5%ঠা விளைந்து வருகிறது. வினைக்கு மூலமான அங்க கினைப்பை நல்ல தாகச் செய்ய வல்லது மதியே; அவ்வாறு செய்திருந்தால் அது கல்வினையாய் இன்பமே கரும்; அங்கனம் செய்யாதவிடின் அது தீவினையாம்; அல்லலே விளக்கின்ற அ.த பொல்லாத விதி யாப்ப் பொங்கிவருங்கால் எந்த மதியும் அதை யாதும் எதிர்க்க முடியாது. விதி மூண்டுவரின் மதி மாண்டு போம் என்னும் முத மொழி விதியின் அதிசய நிலையை நன்கு விளக்கியுள்ளது. 'விதியினுல் வாழ்வதல்லால் மேதினியோர் தங்கள் மதியில்ை வாழ்வது.ஒன் றுண்டோ-பதிதோறும் சங்கரனும் ஐயம்.எடுத் துண்டான்; தடங்கடல்சூழ் மங்கையுடன் காடுறைந்தான் மால்." தேவதேவரும் விதியை வி ல க் க முடியாது என்பதை விளக்குதற்குச் சிவபெருமானையும், திருமாலையும் இது நேரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/57&oldid=1327018" இலிருந்து மீள்விக்கப்பட்டது