பக்கம்:தரும தீபிகை 7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2384 = த ரும தீ பி ைக அவரவர் அடைதல் கெறிகன்மத் தடையும் ஆக்ரவு ஆதா வாமோ? வினேயுள அளவும் கூடியே.கிற்கும் வி&ன அகன் றி.டின்பிரிங் கிடுமால் வினேயினல் வரும்ஆ தரவினின் இயற்கை மெய்உணர்வு அத்தகை யலவே வினேயிலே உங்கள் இடத்தில் நான் இருக்க மெய்யுணர்வு ஒன்றையே காடி வினேயறு கானம் புகுதவே வேண்டி விரும்பினேன் நீர்நிலும் இங்கன். (மகாராசதுறவு) வினையின் விளைவுகளை இவை விழி தெரிய விளக்கியுள்ளன. மனைவி மக்கள் ஒக்கல் எனப் பக்கம் சூழ்ந்த குழுமியுள்ளது மாயக் கூட்டமே; வினையுள்ள அளவும் கூடியிருந்து அக முடிந்தவுடனே யாவும் பிரிந்து போய்விடும்; பிறவி வினையினல் வருகிறது; வினை மன நினைவால் விளைகிறத; ஆகவே தறவியாப் மனத்தை அடக்குவதே பிறவியை நீக்கவுரிய வழியாம் என அரச முனிவர் இங்கே உணர்த்தியிருக்கிருர். அரிய ஞான திலே மருவியுள்ள இந்த உரைக் குறிப்புகள் ஊன்றி உணரக் தக்கன. மீட்டு இங்கு வந்து வினேப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே. (திருவாசகம்) வினைப் பிறவி சாரா திருக்க வேண்டின் புலக்குறும்பை அடக்கி மனத்துறவை மருவியிருக்கவேண்டும் என இறைவனே க் துதிக்கு முறையில்மாணிக்கவாசகர் இங்ங்னம் அருளியிருக்கிரு.ர். புலையான பிறவியில் புகுந்தால் அலைவாய்க் கரும்புபோல் யாண்டும் அல்லலாய் நீண்ட கவலையா அலமந்து அலைய நேரும். ஒரிடத்தோர் உயிர்நெடுநாள் உறைவதில; உததி எனும் ரிேடத்துப் புரிவினையால் நிலையிலுடம் பிதுபோல்ை பாரிடத்தில் சுவர்க்கத்தில் பவர்க்கமதில் எங்கெனினும் சேரிடத்தில் சேருமிது திண்ணம் எனத் தெளிந்திடுதி. (சேதுபுராணம்) பிறப்பில் வீழ்ந்த உயிர்கள் இவ்வாறு கெடுக் துயரங்கள் தோய்த்து நிலைகுலைந்து உழலுகின்றன; ஆகவே துன்பப் பிறவி நீங்குவதே எவ்வழியும் பெரிய இன்பப் பேருய் ஒங்கி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/75&oldid=1327036" இலிருந்து மீள்விக்கப்பட்டது