பக்கம்:தரும தீபிகை 7.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 23.85 905. உயிரினங்க ளுள்ளே உயர்ந்து மனிதன் பெயரடைந் திங்கே பெருகி-இயல்சிறந்து வந்து வளர்ந்தும் வருவ துணராமல் சிந்தை தளர்ந்தான் சிதைந்து. (டு) இ-ள். உலகில் தோன்றிய உயிர் இனங்களுக்குள்ளே மனிதன் உயர்ந்த நிலையில் சிறந்து வந்திருக்கிருன்; அவ்வாறு வந்து வளர்ந்தும் உணரவுரியதை உணராமல் உள்ளம் மடிந்து இழிந்து போகிருன்; அப் போக்கு அவனைப் புலையில் தாழ்த்தி விடுகிறது. சிவப் பிராணிகளுள் மனிதப் பிறப்பு மிகவும் சிறந்தது. பெறலரிய உயர் பிறவியை அடைந்தும் அதல்ை பெற வுரிய பெரிய பயனை அடையாமல் இருப்பது கடையான அவல நிலையாம். ஊன இழிவு ஒழிவதே ஞான வழியாகிறது. அல்லல்கள் பாதும் நேராமல் தன் உயிர்க்கு கல்லதை நாடிக் கொள்வதே ஒருவனுடைய கூரிய அறிவுக்குச் சீரிய பயனம். பொறி வெறிகளில் இழித்த போகாமல் புலன்களை அடக்கி நெறியே ஒழுகிவருபவனே நிலையான பேரின்ப நிலையை அடைய நேர்கின்ருன். நியமமான லேத்தால் சித்தம் சுத்தி ஆகிறது; ஆகவே முக்தி நிலை அவனுக்கு முதல் உரிமையாய் வருகிறது. மனம் மாசு படின் மனிதன் நீசம் அடைகிருன்; அடையவே ஈசன் அருளை இழந்து அவன் இழிந்து கழிந்து தொலைகின்ருன். உள்ளம் கெட்டபொழுக மனிதன் கெட்டவளுப் இழித்து படுதலால் நல்ல அறிவு அவனிடமிருந்த ஒழிந்த விடுகிறது. Men that are greatly guilty are never wise. [E. Burke] மிகவும் குற்றமுள்ள ம னி த ர் ஒருபோதம் ஞானம் உடையவராகார் என எட்மண்டுபர்க் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிருர் பிழைகள் படிந்த உள்ளம் பாழ் படின் அந்த மனிதன் உயர் கலங்கள் யாதும் அடையமுடியாது. தன் உள்ளத்தைப் புனிதப்படுத்தி வருகிறவனே உயர்ந்த கதிகளை அடைய நேர்கின்ருன். தான் பிறந்த பிறப்பைச் சிறக்க கிலையில் உயர்த்துகின்றவனே உத்தம மனிதனய் ஒளி மிகுக்க கிற்கின்ருன் உயர்வு என்பது துயர் தோயாக தாய நிலையை. 299

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/76&oldid=1327037" இலிருந்து மீள்விக்கப்பட்டது