பக்கம்:தரும தீபிகை 7.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வ ர ம் 2317 தன் கடமையைக் கருதிச் செய்பவன் எவ்வழியும் பெருமை பெறுகிருன்; அவ்வாறு செய்யாதவன் சிறுமை யுறுகிருன். Of all the ways of life but one— The path of duty — leads to happiness. (Southey) வாழ்வுக்கு உரிய வழிகள் எல்லாவற்றுள்ளும் கடமையைக் கருதிச் செய்வது ஒன்றே நல்ல வழி; அதுவே இன்ப வாழ்வை இனிது அருளுகிறது என சதே என்னும் ஆங்கில அறிஞர் இங்ங்ணம் கூறியிருக்கிருர். சிங்கு இது சிந்திக்கத்தக்கது. There's life alone in duty done, And rest alone in striving. (Whittier) கடமையைச் செய்வதில்தான் நல்ல வாழ்வு இருக்கிறது; இல்லையானல் அது அல்லல்தான் என்னும் இது இங்கே அறிய வுரியது. கருமமே தருமமான வாழ்வைத் தருகிறது. குடி வாழ்க்கைக்கு இனிய ஆதாரமாயுள்ள கருமங்களைக் கருதிச் செய்து தன் குடும்பத்தை நன்கு பேணி வருபவன் சல்ல ஆண் மகனப் எங்கும் மேன்மை பெறுகின்ருன். கல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். (குறள், 1026) சிறக்க ஆண்மையாளனுடைய பான்பையைத் தேவர் இவ் வா.ற வரை க்து காட்டியிருக்கிருர் இல்லை இனித ஆளும்தன்மை இல்லாண்மை என நின்றது. பேராண்மை போராண்மை ஊராண்மை வில்லாண்மை சொல்லாண்மை முதலாக ஆண்மை கள் பல உள்ளன. அவற்றுள் எல்லாம் உயர்ந்த நல்ல ஆண்மை ஈண்டு நல்லாண்மை என விபக்து சொல்ல வந்தது. தான் பிறந்த குடியைச் செல்வம் முதலிய நலங்களால் சிறந்ததாக ஒருவன் உயர்த்தியபோது அந்தக்குடியில் உள்ளவர் அனைவரும் அவனைத் தலைவனுக வணங்கி எவ்வழியும் அடங்கி அவனுடைய சொல்வழியே கடந்து வருகின்றனர்; வரவே முடி அரசன் போல் அக்குடிக்கு அவன் தனி அரசளுகின்ருன். தன்னைச் சார்ந்தவரை வளமா வாழச்செய்து தன் ஆணை வழியே அவரை அடக்கி ஆண்டு வருகலால் நல்ல ஆண்மையாளனுயி ன்ை. ஆளும் தன்மை ஆண்மை என அமைந்துள்ளமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/8&oldid=1326968" இலிருந்து மீள்விக்கப்பட்டது