பக்கம்:தரும தீபிகை 7.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2318 தரும பிேகை அதன் பான்மையும் மேன்மையும் தெளிந்து கொள்ளலாம். குடியை நயமா ஆள்பவன் பின்பு படியை வியன ஆளும் பாக்கியவானவான். ஆகவே அவனது.அதிசயமகிமை அறியலாம். i நல்ல ஆண்மையாளனச் சிறந்து விளங்கி உயர்க்க புகழை அடையவேண்டின் நீ பிறந்த குடியைகிறைக்கபெருமையுடைய தாச் செய்; கருமவீரன் என்னும் பெருமையும் அருமையான தலைமையும் இருமை யின்பங்களும் அதல்ை உனக்கு உளவாம். தாய் தந்தையரைத் தகவாப் பேணி, மனைவி மக்களை இனிது பாதுகாத்து, ஒக்கல் உறவுகளை உரிமையோடு ஒம்பிவரின் அந்த மனிதன் அரிய மகிமைகளை அடைந்து கொள்கிருன். குடியை உரமாக்கி உயர்த்தி வரமான புகழுடன் உயர்ந்து கொள்ளுக. 884. போதனைகள் போதிக்கும் புத்தியினும் எவ்வழியும் சாதனைகள் சாதிக்கும் சத்தியே-வேதனைகள் யாவும் அகற்றும் அரிய மகிமைகள் மேவும் அதல்ை மிகுந்து. )صو( இ-ள். தரும நீதிகளைப் போதிக்கும் அறிவினும் கருமங்களைக் கருதிச் செய்யும் ஆற்றலே எற்றம் உடையது; அதவே தயாங் களை நீக்கி உயர்கலங்களை அருளி எவ்வழியும் உறுதி தரும் என்க. மனித இனம் வாழுகின்ற இவ்வுலகிற்குக் கருமபூமி என்று ஒரு பெயர் மருவியுள்ளது. செய்க வினைகளால் பிறந்து வங் துள்ள வேர்கள் செய்யும் கருமங்களால் வாழுவது கேமமா நேர்ந்தது. உயிர் வாழ்வு உயர்வான நிலையில் ஒழுகவுரியது. அறிவால் மனிதன் பெருமை பெற்றிருக்கிருன்; ஆயினும் அது பயிற்சி படிந்து முயற்சியில் மூண்டபோதுதான் உயர்ச்சி அடைக்க ஒளி மிகுந்து திகழ்கின்றது. கூரிய பார்வையால் கண் கவின் உறுகிறது; காரிய சாதனையால் அறிவு பெருமை பெறுகிறது. உழையாகவன் பிழையாகவே பிழைக்க கேர் கின்ருன் ஆகலால் அவனுடைய அறிவு எவ்வழியும் பிழைபடு கிறது.பிழைகோமல்பிழைப்பவனேபெருமைமிகப்பெறுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/9&oldid=1326969" இலிருந்து மீள்விக்கப்பட்டது