பக்கம்:தரும தீபிகை 7.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2394 த ரும தீ பிகை மருந்தாகித் தப்பா மரத்தற்ருல் செல்வம் பெருந்தகை யான்கண் படின். (குறள், 217) உயர்ந்த பெருந்தகையாளனுடைய செல்வம் சிறந்த மருந்து மரம்போல் பலர்க்கும் இகமாய் இனிது பயன்படும் எனத் தேவர் இங்கனம் உபகார நிலையை உணர்த்தியிருக்கிருர் மருந்து என்னும் சொல் கிறைக்க பொருள்களையுடையது. உடல் கோப் களைத் தீர்த்து உயிர்க்கு உறுதி நலங்களை அருளுவது மருந்து என வந்தது. இனிய இதங்கள் அரிய அமுகங்களாகின்றன. உற்ற துயர்களை நீக்கி மக்களுக்கு உதவிபுரிந்த வருபவன் உயர் குலமகனப் ஒளி மிகப் பெறுகிருன். உயிர்கள் இன்புற ஒழுகிவருபவன் உருவத்தில் மனிதனுயினும் உ ண்மையில் தெய்வ மாய் அவன் உயர்ந்து கிற்கின்ருன். எவ்வழியும் தன் நலமே நாடி புழல்பவன் தக்க கலங்களை அடையாமல் வாழ்வில் தாழ்வுறுகிருன்; பிறர்க்கு இகம் கருதி வருபவன் பெரிய மேன்மையாளனப் அரிய கதிகளே எளிதே அடைகிருன். எண்ணம் இனிதாப் வரப் புண் ணியம் வருகிறது. ஒர் அறிவுடைய மரமும் நிழல் முதலியன உதவி விழுமிய வாழ்வின் நிலையை ஆறறிவுடைய மனிதனுக்கு அறிவுறுத்தி வரு இறது; அந்த உபகார நீர்மை மதிநலம்சாக்து அதிசய போகனே யாய்த் துதி கொண்டு யாண்டும் மகிமை தோய்ந்துள்ளது. இலைதழை தளிர்க ளாலும் இனியகல் கிழல்க ளாலும் அலர்மலர் கணிக ளாலும் அடியுறு வேர்க ளாலும் பலவுயிர்க் கிதமாய் கின்று பயன்படு மரம்போல் கன்னே உலகினுக்கு உதவி கின்ருன் உயர்பர கிை கின்ருன். சிவர்களுக்கு இதம் செய்து வருபவனிடம் தேவ தே லுடைய திருவருள் நேரே ஆவலோடு வருகிறது; வரவே அவ எவ்வழியும் திவ்விய நிலைகளைச் செவ்விதா எய்தித் தேசுறுகிரு எங்கே உபகார நீர்மைகள் பொங்கி வருகின்றனவோ அங்கே கடவுளுடைய கருணை ஒளிகள் தங்கி யிருக்கின்றன. வெளி ஆடம்பரங்களாகக் களியாட்டங்கள் புரிந்து வள்ளல் எனப் பிறர் சொல்ல வேண்டும் என்னும் நசையோடு செய் யாமல் உள்ளப் பண்புடன் உவந்து புரிவதே உயர்க்க மேன்மை யாம். இயல்பான இனிய உதவி உயர்வாய் ஒளி புரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/85&oldid=1327046" இலிருந்து மீள்விக்கப்பட்டது