பக்கம்:தரும தீபிகை 7.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 2397 இன்பு ஒர் அணுவாய் இடாதற்கு மாமலேயாம் புன்போகம் வேண்டிப் புலம்பாதே-என் போடே உள்ளம் உருகவரும் ஒண் போரூர் ஐயனருள் வெள்ளமுற நெஞ்சே விரும்பு. (திருப்போரூர்ச்சங்கிதிமுறை) பிறவித் துன்பங்களுள் சிலவற்றை வரைந்து காட்டிப் பிறவா நிலையைப் பெறும்படி இவை உணர்த்தியுள்ளன. கவி களின் பொருள்களை ஊன்றி நோக்கினுல் அல்லல் வாழ்வுகளை யும், அவல நிலைகளையும் ஒரளவு நேரே அறிந்து கொள்ளலாம். பசிக் தீயை அவிக்க உண்ணுவதும், அக்க உணவுகளைத் தேட உழைப்பதும், மலசலங்களை அருவருப்போடு கழிப்பதும் ஓயாத துயரங்களாப் நாளும் உடன் தொடர்ந்துள்ளன. பிணி மூப்பு சாக்காடுகள் எவ்வழியும் மூண்டு யாண்டும் நீண்டு கிற்கின்றன. இழவுகளின் ஒலிகளே எங்கும் ஒங்கியுள்ளன. செக்க சவங்களுக்காகச் சாகின்ற சவங்கள் அழுவதே உலக வாழ்வில் இயல்பா ப் ஊடுருவி யுள்ளது; அந்த அவல கிலையை உணர்த்தவே பிறந்தபொழுதே குழங்கைகள் அழுகின் றன. சாகும் வரையும் சஞ்சலமே என்பதை அந்த அழுகை தெளிவா ஒலித்து நிற்பினும் யாரும் அதனே உணர்வதில்லை. அதன் காரணங்கள் பூரண அனுபவங்களால் அறிய வருகின்றன. We wept when we came into the world, and every day tells us why. (The Good-natured man, 1) இந்த உலகில் வந்து பிறந்த பொழுத நாம் அழுகோம்; அதன் காரணத்தை நாள்தோறும் கண்டு வருகிருேம் என்னும் இது இங்கே காணத்தக்கது. எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அறிஞர்கள் பிறவியைப் பெருக் கயரமுடையதாகவே கருதி யுள்ளனர். துக்கமயம் பிறவி எனத் துறவிகள் துணிக்தனர். அழிதுயரங்களிலிருந்த நீங்கி உய்ய நல்ல வழியை நாடிக் கொள்ளுவதே சிறந்த அறிவு பெற்ற பயனும். பிறக்க பிறப்பை யும் அதனல் பெற வுரியதையும் உணர்ந்து உ யிர்க்கு உறுதியை அடைந்து கொள்பவனே அதிசய பாக்கியவான் ஆகின்றன். பவப்பிணி ஒழிவதே தவப் பயன் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/88&oldid=1327049" இலிருந்து மீள்விக்கப்பட்டது