பக்கம்:தரும தீபிகை 7.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2398 த ரும தி பி கை 910. புல்லிய பொல்லாப் புலைநிலையில் போகாமல் நல்ல பிறவியை கண்ணியுள்ளாய்-ஒல்லையில் செய்ய வுரியதைச் செய்து திருவருளே எய்தி யுயர்க இனிது. (ιδ) இ-ன். புலையான இழிந்த பிறவிகளில் தொலைந்து போகாமல் உயர் வான நல்ல மனிதப் பிறவியை அடைந்தள்ளாய்; விரைந்து செய்யவுரிய நலங்களைச் செய்து தெய்வ அருளை எ ப்தி உயர்க. அறிவு கலம் நன்கு அமைந்தது ஆதலால் மனிதப் பிறவி உயர்ந்தது எனப் புகழ்ந்த போற்ற வந்தது. மாடு ஆடு முதலிய இழிபிறவிகளில் இழிந்துபோகாமல் உயர்ந்தபிறப்பை அடைந்து வந்துள்ளமையால் சிவகோடிகளுள் மனிதன் அதிசயமான மகிமையுடையவனப் எவ்வழியும் மாண்பு மிகப் பெற்ருன். அரிய இந்தப் பிறவியைப் பெற்றவன் இதற்கு உரிய பயனை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும். பிறவியின் பயனே மறவியால் இழந்துவிட லாகாது. அந்தப் பயன் என்ன? உயிர் துயர் நீங்கி உப்தி பெறுவதே. யாதொரு துன்பமும் இன்றி என்றும் இன்ப மூர்த்தியாயுள்ளவன் இறைவன் ஒருவனே; உயிர்க்கு உயிரான அப்பரமனைக் கருதி உள்ளம் உருகிவரின் பிறவி தீர்ந்து பேரின்ப வெள்ளம் பெருகிவரும். அந்த அதிசய ஆனந்தத்தை இழந்துவிடின் அவலத் துயர்கள் தொடர்ந்து கொள்ளும். காலம் இசைக்த போதே கதிகலம் கானுக. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அங்கிலேயே செய்தற்கு அரிய செயல். (குறள், 489] அரிய சமையம் வாய்க்கபோது செய்ய உரியதை உடனே செப்து உப்க என்னும் இது இங்கே கன்கு சிந்திக்கத்தக்கது. செத்து விழுமுன் சீவனுக்கு ஒர்கலன் ஒத்த காக உணர்பவர் உத்தமர்: முத்தர் பெற்றவர்; மூடர் பெருதவர் பித்தர் பேதையர் பேயர் பிசாசரே. இதனே ஈண்டு உய்த்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுக. எடுத்த பிறவியைக் கொண்டு அடுத்த பிறவி அடையாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/89&oldid=1327050" இலிருந்து மீள்விக்கப்பட்டது