பக்கம்:தரும தீபிகை 7.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்றிரண்டாம் அதிகாரம் இ ரு ப் பு அஃதாவது பிறந்த பிராணிகள் இவ்வுலகில் இருந்து வாழும் இயல்பு. பிறப்பின் வழியே நிகழ்வது ஆதலால் அதன் பின் இது வைக்கப்பட்டது. உற்ற பிறப்பும் உரிய இருப்பும் சிறப்பு மிக வுடையன; ஆகவே குறிப்போடு கூர்ந்து அறிய வந்தன. 91.1. பிறந்து வளர்ந்து பெருகி யிருந்தார் இறந்து படவே இசைந்தார்-சிறந்த பயனை கினைந்து பரிந்து புரியார் மயலில் இழிந்தார் மருண்டு. (க) இ-ள். மனிதராப் இங்கே வந்து பிறந்தவர் வளர்ந்து வாழ்ந்து இறுதியில் இறந்துபோகின்ருர், சாகுமுன் உயிர்க்கு உறுதியை உணர்ந்து புரிந்தவர் உயர்ந்த கதியை அடைந்தார்; அவ்வாறு புரியாதவர் மையலில் அழுந்தி வெய்ய துயரில் விழுக்கார் என்க. உலக வாழ்வில் மனித சமுதாயம் கனிமகிமையுடையதாய் உயர்ந்துள்ளது. அறிவு கலங்களோடு ஆற்றல்களும் பெருகி யிருத்தலால் யாண்டும் அது ஏற்றமாப் வருகிறது. வாழ்க்கை வசதிகளை வளமாக்கி நலமா வாழ்ந்து வரவே மானிட வாழ்வு கள் மாண்படைய நேர்ந்தன. அனுபவங்களாப் நேர்ந்த நிலை கள் யாவும் ஒர்ந்து சிக்தித்து உயர்ந்த உறுதி காண வாய்ந்தன. அரிய பிறவியை அடைந்து வந்துள்ள மனிதன் அதற்கு உரிய பயனை உணர்ந்த அளவுதான் உயர்ந்து திகழ்கிருன். எய்திய பிறப்பு எதிரே இறப்பை நோக்கி நிற்றலால் செய்ய வுரியதை விரைந்து செய்து கொள்ள வேண்டும். உறுவதை உணர்ந்து புரிபவன் உறுதி ல ங் க ளே இனிது அடைந்து கொள்ளுகிருன்; புரியாதவன் பரிதாபமா யிழிந்து போகிருன். இனிய உணவுகளை உண்டு அழகிய மங்கையரை மருவிச் சுகமா உறங்கி எழுவதே மனித வாழ்வின் இயல்புகளாய் யாண்டும் இயங்கி வருகின்றன. விலங்கினங்களிடமும் இவை துலங்கி நிற்கின்றன. உண்ணல் கண்ணல் உறங்கல் என இந்த 301

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/92&oldid=1327053" இலிருந்து மீள்விக்கப்பட்டது